அவதாரம் (1995 திரைப்படம்)
நாசர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவதாரம், (Avatharam) 1995 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படமே நாசர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நாசர், ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். வைத்தியநாதன் இத்திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் 1995 சூன் 9 அன்று வெளியிடப்பட்டுள்ளது.[1][2][3]
Remove ads
Remove ads
கதைச்சுருக்கம்
குப்புசாமி (நாசர்) வெகுளியான மனிதன். அவனுக்கு பாண்டியினுடைய (டெல்லி கணேஷ்) நாடக குழுவில் இணைய வேண்டும் என்ற ஓர் கனவு இருந்தது. இவருடைய குழுவே இந்து சமய நிகழ்ச்சிகளில் பல கலைகளை ஆற்றிவந்தது. பாண்டியின் குழுவில் உள்ள வாசி என்பவனின் துர்நடத்தை காரணமாக பாண்டி அவனை குழுவை விட்டு நீக்கிவிட்டு குப்புசாமியை குழுவில் இணைத்துகொள்கிறார். பாண்டியின் மகள் பொன்னம்மா (ரேவதி) பார்வை அற்றவள். பின்னர் பொன்னம்மாவும் குப்புசாமியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மேடை நிகழ்ச்சிகளுக்கு பணம் கொடுப்போர் பெண்கள் மேடையில் ஆட வேண்டும் என விரும்புகிறார்கள். ஒரு மேடை நிகழ்ச்சியின் போது பாண்டி இறந்து போகவும் அவரின் குழுவில் இருதவர்கள் பிரிந்து சென்றனர். குப்புசாமியும் பொன்னம்மாவும் நடிகர்களாக மாறவேண்டும் என்ற நோக்குடன் ஊரைவிட்டு புறப்பட்டு வாசியுடன் போய் தங்குகின்றனர். ஆனால் வாசியோ பொன்னம்மாவை கற்பழித்துவிட்டு குப்புசாமியை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறான். அங்கிருந்து தப்பித்த குப்புசாமி வாசியைப் பழிவாங்குவது கதையின் இறுதி அம்சமாக இருந்தது.
Remove ads
நடிகர்கள்
- நாசர் -குப்புசாமி
- ரேவதி - பொன்னம்மா
- பாலா சிங் - வாசி
- ஸ்ரீவித்யா - வழக்கறிஞர்
- டெல்லி கணேஷ் - பாண்டி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சிங்காரம்
- சச்சு - சிங்காரத்தின் மனைவி
- காகா இராதாகிருஷ்ணன்
- ஜூனியர் பாலையா - கிருஷ்ணா
- முரளி குமார் - பூங்காவனம்
- சண்முகசுந்தரி - மருதாயி
- வின்சென்ட் ராய் -காவற்துறை அதிகாரி
- தியாகு
இசை
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 1995 இல் இசை வெளியிடப்பட்டுள்ளது. ஆறு பாடல்கள் இதில் அடங்கியுள்ளது. இசையமைப்பிற்கு மூன்று நாட்களே எடுத்துக் கொள்ளப்பட்டது..[4][5][6][7] பாடல்வரிகள் வாலியால் எழுதப்பட்டுள்ளது.
விருதுகள்
- 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads