Remove ads

அரிப்புத் தோலழற்சி (Eczema) அல்லது மரபுவழித் தோல் அழற்சி (atopic dermatitis)[2] என்பது ஒரு வகை சருமவழல் வியாதியாகும்[3]. இதை, மேல்தோல் அழற்சி என்றும் கூறலாம்[4].

விரைவான உண்மைகள் அரிப்புத் தோலழற்சி, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
அரிப்புத் தோலழற்சி
மிதமான சருமவழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புQ11916943
ஐ.சி.டி.-10L20.-L30.
ஐ.சி.டி.-9692
ம.இ.மெ.ம603165
நோய்களின் தரவுத்தளம்4113
மெரிசின்பிளசு000853
ஈமெடிசின்Derm/38 Ped/2567
ம.பா.தD004485
மூடு

from ancient Greek ἔκζεμα ékzema[1],
from ἐκζέ-ειν ekzé-ein,
from ἐκ ek "out" + ζέ-ειν zé-ein "to boil"

(OED)

அரிப்புத் தோலழற்சி என்ற சொல்லானது நாட்பட்ட தோல் வியாதி நிலைகள் பலவற்றைக் குறிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வறட்சி மற்றும் பின்வரும் இயல்புகளில் ஒன்று அல்லது மேற்பட்ட அறிகுறிகளுடன் காணப்படும் அதிகரிக்கும் தோல் தடிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்: சிவத்தல், தோல் வீக்கம், நமைச்சல் மற்றும் வறட்சி, பக்கு உதிர்வு, செதில் செதிலாக மாறுதல், கொப்புளம், வெடிப்பு விடுதல், கசிதல் அல்லது இரத்தம் வருதல். தற்காலிக தோல் நிறமிழப்பு காணப்படலாம். சில நேரங்களில் இவை குணமான காயங்களால் கூட உருவாகலாம். குணமாகும் ஒரு காயத்தை சொறிந்தால் அது புண்ணாகலாம். அரிப்புத்தோல் வியாதியுடன் அரிக்கும் தோலழற்சியைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. தடிப்புத் தோல் அழற்சியைப் போலன்றி, அரிக்கும் தோலழற்சியானது பெரும்பாலும் மூட்டுகளின் மடக்குப் பகுதிகளிலேயே காணப்படுகிறது.

எக்சீமா சிரங்கை தமிழில் கரப்பான் புண் என்று கூறுவர்.

Remove ads

வகைப்பாடு

Thumb
மிகவும் தீவிர அரிக்கும் தோலழற்சி
Thumb
சொறியப்பட்ட அரிக்கும் தோலழற்சி வந்த ஒரு பகுதி

அரிப்புத் தோலழற்சி குறிப்பிட்ட நோய் சிறப்பியல்புகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இதற்கு அடிப்படையாக இருக்கும் நோய்களின் வகைப்பாடானது சார்புத் தன்மையுடனும் முறையற்ற வகையிலும் உள்ளது. மேலும் ஒரே நிலையை விவரிக்க பல்வேறு ஒத்த பொருளுடைய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரிக்கும் தோலழற்சியின் வகையை இடம், (எ.கா: கை அரிப்புத் தோலழற்சி), குறிப்பிட்ட தோற்ற இயல்பு, (அடர்வான வெடிப்பு (craquele) உள்ளது அல்லது வட்டு வடிவமானது (discoid)] அல்லது சாத்தியக்கூறுள்ள காரணங்கள் [சுருள்சிரையிய (varicose) அரிப்புத் தோலழற்சி] ஆகியவற்றைப் பொறுத்து விவரிக்கலாம். இந்தக் குழப்பத்தை அதிகரிக்கும் விதத்தில், பல ஆதாரங்கள் அரிக்கும் தோலழற்சி என்ற சொல்லையும் மிகவும் பொதுவான வகை அரிப்புத் தோலழற்சிக்கான சொல்லையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றன.

ஒவ்வாமையியல் மற்றும் மருத்துவ எதிர்ப்புத்திறனுக்கான ஐரோப்பிய அகாடமி (EAACI) 2001 ஆம் ஆண்டில் ஒரு நிலை அறிக்கையை வெளியிட்டது. அதில் மரபுவழி மற்றும் ஒவ்வாமைத் தொடர்பான அரிப்புத் தோலழற்சி உள்ளிட்ட ஒவ்வாமை தொடர்பு வியாதிகளை வகைப்படுத்துவதை எளிமையாக்கக்கூடிய பெயரியல் இடம்பெற்றிருந்தது[5]. ஒவ்வாமையற்ற அரிக்கும் தோலழற்சிகள் இந்த முன்மொழிதலால் பாதிக்கப்படுவதில்லை.

கீழே வழங்கப்பட்டுள்ள வகைப்பாடானது நிகழக்கூடிய அதிர்வெண்ணைப் பொறுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவான அரிக்கும் தோலழற்சியின் வகைகள்

  • மரபுவழி அரிப்புத் தோலழற்சி (Atopic eczema) (குழந்தைக்குரிய அரிப்புத் தோலழற்சி, சந்திப்புகளுக்குரிய அரிப்புத் தோலழற்சி, மரபுவழி அரிப்புத் தோலழற்சி என்றும் அழைக்கப்படும்) என்பது ஒரு ஒவ்வாமை வியாதியாகும். இது ஈழைநோய் (Asthma) இருக்கும் ஓர் உறுப்பினரின் குடும்பத்தில் மரபுக்கூறைக் கொண்டியங்கும் எனவும் நம்பப்படுகிறது. அரிப்புடன் கூடிய தடிப்பு, அதுவும் குறிப்பாக தலை, தலையின் தோல் பகுதி, கழுத்து, கை மூட்டுகளின் உள்பக்கம், கால் முழங்கால்கள் மற்றும் பிட்டங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படும். எரிச்சலூட்டும் தொடர்பு ஒவ்வாமையின் போது தேவையற்ற கூறுகளை அகற்றும் செயலின் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பொதுவாகக் காணப்படுகிறது. (L20)
  • அன்னியப்பொருள் தொடர்பு தோலழற்சி (Contact dermatitis) இரு வகை உண்டு: ஒவ்வாமை கொண்டது (நஞ்சுப் படர்க்கொடி அல்லது நிக்கல் போன்ற ஒவ்வாமைப் பொருள்களுடன் தொடர்பு ஏற்பட்டு சிறிது காலம் கழித்து ஏற்படும் எதிர்வினையினால் உருவாவது) மற்றும் எரிச்சலூட்டுவது [உதாரணமாக, சோடியம் உப்பு (sodium lauryl sulfate) சலவைத்தூள்களின் நேரடி தொடர்பினால் ஏற்படுவது). சில பொருள்கள் ஒவ்வாமைப் பொருளாகவும் அதே சமயம் எரிச்சலூட்டுபவையாகவும் உள்ளன (எடுத்துக்காட்டுக்கு ஈர சிமெண்ட்). பிற பொருள்கள் சூரிய ஒளிக்குட்படுத்தப்பட்ட பின்னர் சிக்கலை ஏற்படுத்துகின்றன, இதனால் விளைவதே ஒளிநச்சு சருமவழலாகும். தொடர்பு அரிக்கும் தோலழற்சி நோய்களில் முக்கால் பங்கு நிகழ்வுகள் எரிச்சலூட்டும் வகையைச் சேர்ந்தவையே ஆகும். இவையே பொதுவான தொழில்வழி தோல் வியாதியாக உள்ளது. தொடர்பு அரிக்கும் தோலழற்சி குணப்படுத்தக்கூடியதாகும், ஆனால் பாதிப்பை ஏற்படுத்திய பொருளைத் தவிர்க்கவும் ஒருவரது சூழலிலிருந்து அதனையும் அதன் தடத்தையும் அகற்றவும் முடியும் என்ற நிலை அவசியம். (L23; L24; L56.1; L56.0)
  • உயிர்ச்சத்து குறை அரிப்புத் தோலழற்சி (Xerotic eczema) [வறட்சித் தோல் நோய் (asteatosis), அடர்வுத் தோல் வெடிப்பு (craquele), குளிர்கால நமைச்சல், அதீத நமைச்சல் குளிர்ச் சூழல் தோலழற்சி (pruritus hiemalis) என்றும் அழைக்கப்படும்] வறண்ட சருமம் ஆகும், அது பின்னர் தீவிரமடைந்து அரிப்புத் தோலழற்சியாக மாறும். அது குளிர்காலத்தில் மிகவும் மோசமாகிறது, பெரும்பாலும் இதனால் கை கால் மற்றும் உடல் பகுதி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. நமைச்சலும் தொந்தரவும் உள்ள தோலானது வறண்ட, வெடிப்புகளுடன் கூடிய ஆற்றுப் படுகையைப் போலவே காணப்படும். இந்தக் குறைபாடானது வயது முதிர்ந்த மக்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பிறவிஉலர்தோல் (Ichthyosis) என்பது இதனுடன் தொடர்புடைய ஒரு குறைபாடாகும். (L30.8A; L85.0)
  • எண்ணெய்ச்சுரப்பு மிகைப்பு சருமவழல் (Seborrhoeic dermatitis) அல்லது ஊறல் தோலழற்சி (Seborrheic dermatitis) [குழந்தைகளுக்கு வரும் மண்டைத் தோல்தடிப்பு (cradle cap)] என்பது சில நேரங்களில் அரிப்புத் தோலழற்சியின் ஒரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது, மேலும் அது பொடுகு (இலங்கை வழக்கு:சொடுகு) வியாதியுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. இதனால் மண்டையில், முகத்தில் மற்றும் சில நேரங்களில் உடலில் வறண்ட வழவழப்பான தோலுரிதல்கள் ஏற்படுகின்றன. மண்டைத் தோல் தடிப்பின் தீவிர நிலையாகாதவரை இந்த நிலையானது தீங்கற்றதாகும். பிறந்த குழந்தைகளில் இதனால் தடித்த, மஞ்சள் நிற சொரசொரப்பான மண்டைத் தோல் தடிப்புகள் உருவாக இது காரணாகிறது. இது பயோட்டின் குறைபாட்டுடன் தொடர்புடையதாகவும், பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது. (L21; L21.0)

பொதுவாகக் காணப்படாத அரிக்கும் தோலழற்சிகள்

  • வியர்வைக்கட்டி (Dyshidrosis) (சுவேதனக்கேட்டு அரிக்கும் தோலழற்சி, குமிழ்வு (pompholyx) அல்லது விரல் ஒரங்களில் கொப்புளம்), கொப்புள உள்ளங்கை, உள்ளங்கால் தோலழற்சி (vesicular palmoplantar dermatitis), இல்லத்தரசியின் அரிக்கும் தோலழற்சி (housewife's eczema) என்றும் அழைக்கப்படுகிறது) உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் கை விரல்கள் மற்றும் கால் விரல்களின் உட்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஒளி ஊடுருவக்கூடிய தன்மை கொண்ட வீக்கங்கள் நீர்மக் கொப்புளங்கள் என அழைக்கப்படுகின்றன, தடித்தல், வெடிப்புகள் ஏற்படுதல்களுடன் இரவில் மிகவும் அதிகரிக்கும். நமைச்சலும் இருக்கக்கூடும். கை அரிக்கும் தோலழற்சியின் ஒரு பொதுவான வகையான இது வெப்ப காலங்களில் மிகவும் மோசமாகிறது. (L30.1)
  • வட்டுருவஅரிக்கும் தோலழற்சி (Discoid eczema) [வட்டவில்லை தோலழற்சி (nummular dermatitis), கசிஅரிப்புத் தோலழற்சி (exudative eczema), நுண்ணுயிரிய அரிப்புத் தோலழற்சி (microbial eczema) எனவும் அழைக்கப்படுகிறது] என்பதில் கசியும் தன்மை கொண்ட அல்லது வறண்ட வட்ட வட்டப் பகுதிகள் ஏற்படும், அவை தெளிவான ஓரங்களைக் கொண்டிருக்கும். இவை பொதுவாக கீழ்க்கால்களில் ஏற்படும். வழக்கமாக இது குளிர்காலத்தில் மிகவும் மோசமாகிறது. இதற்கான காரணம் அறியப்படவில்லை, மேலும் இது வந்து வந்து போகும் போக்கைக் கொண்டுள்ளது. (L30.0)
  • நரம்பிய அரிப்புத் தோலழற்சி (Venous eczema) [புவியீர்ப்பு அரிப்புத் தோலழற்சி (gravitational eczema), மந்தச் சருமவழல் (stasis dermatitis), சிரைத் தளர்ச்சி அரிப்புத் தோலழற்சி (varicose eczema) என்றும் அழைக்கப்படும்] இரத்த சுழற்சி பலவீனமாக உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது, மேலும் பொதுவாக இது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணுக்கால் பகுதியில் ஏற்படுகிறது. தோலில் சிவப்பு நிறப் பகுதிகள், அளவில் மாற்றங்கள், கருத்தல் மற்றும் நமைச்சல் ஆகியவை ஏற்படும். இந்தக் குறைபாடானது கால் புண்களுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். (L83.1)
  • அக்கி அம்மை (Dermatitis herpetiformis) [துரிங் வியாதி (Duhring's Disease) எனவும் அழைக்கப்படும்] என்பது அதிக நமைச்சலையும் பொதுவாக கைகள், தொடைகள், முழங்கால்கள் மற்றும் முதுகில் ஒத்த தடிப்புகளையும் ஏற்படுத்தும். அது குளூட்டன் ஒவ்வாமை (செலியாக் வியாதி) யுடன் நேரடி தொடர்புடையதாகும். மேலும் இதை சரியான உணவுப்பழக்கத்தால் தீர்க்க முடியும், இது இரவில் மிகக் கடுமையாக தொந்தரவளிக்கும். (L13.0)
  • நரம்பியச் சருமவழற்சி (Neurodermatitis) [லிச்சென் சிம்ப்ளெக்ஸ் கிரோனிக்கஸ் (LSC), இடமறியப்பட்ட அரிப்பு சருமவழற்சி எனவும் அழைக்கப்படுகிறது] என்பது அரிக்கும் தோலழற்சிப் பகுதியில் தேய்த்தல் மற்றும் சொறிதல் பழக்கம் இருப்பதால் ஏற்படும் தோல் தடித்தல், நமைச்சல் மற்றும் நிறமாற்றம் ஆகும். பொதுவாக ஒரு இடத்தில் மட்டுமே காணப்படும். பெரும்பாலும் இது, பழக்கவழக்க மாற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துண்ணல் ஆகியவற்றினால் குணப்படுத்தக்கூடியதாகவே உள்ளது. உருண்டையாக்கும் சொறி (Prurigo nodularis) என்பது பல தடிப்பு வீக்கங்கள் காணப்படும் மற்றொரு தொடர்புடைய குறைபாடாகும். (L28.0; L28.1)
  • தானாய் அரிக்கும் தோலழற்சியாதல் (Autoeczematization) [படர்தாமரை (id reaction; Dermatophytide reaction), சுயத்தூண்டல் (autosensitization) என்றும் அழைக்கப்படுகிறது] என்பது ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள், நுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளின் நோய்த்தாக்கத்தின் பதில்வினையாக ஏற்படும் அரிக்கும் தோலழற்சி நிலையாகும். இதற்கு காரணமாக இருந்த நோய்த்தாக்கத்தின் தோற்றத்தைக் கண்டு அதை சுத்தம் செய்வதன் மூலம் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். இதன் காரணத்தைப் பொறுத்து இதன் தோற்றம் மாறுபடுகிறது. இது வழக்கமாக நோய்த்தாக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே காணப்படுகிறது. (L30.2)
  • அரிக்கும் தோலழற்சியுடன் நச்சுயிரிகளின் நோய்த்தாக்கங்கள் (ஹெர்பெட்டிக்கம் அரிக்கும் தோலழற்சி, வேக்சினேட்டம் அரிக்கும் தோலழற்சி) மற்றும் உள்ளிருக்கும் வியாதியினால் உருவாகும் அரிக்கும் தோலழற்சிகள் [எ.கா. வடிநீரகப்புற்று (lymphoma)] ஆகியவை சேர்ந்து இருக்கும் நிலைகளும் உள்ளன. மருந்துகள், உணவுகள் மற்றும் வேதிப்பொருள்கள் ஆகியவற்றை உட்கொள்வதால் ஏற்படும் அரிக்கும் தோலழற்சிகள் இதுவரை முறைப்படுத்தப்படவில்லை. இங்கே பட்டியலிடப்பட்டவற்றுடன் இன்னும் சில பிற அரிதான அரிக்கும் தோலழற்சி குறைபாடுகளும் உள்ளன.
Remove ads

சிகிச்சைமுறைகள்

அரிக்கும் தோலழற்சிக்கு அறியப்பட்ட குணமாக்கும் சிகிச்சை முறை இல்லை. இதனால் அழற்சியைக் குறைப்பதன் மூலம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் நமைச்சலைப் போக்குவது ஆகியவையே இதற்கான சிகிச்சை முறைகளின் குறிக்கோள்களாக உள்ளன.

மருந்துகள்

கார்டிகோஸ்டெராய்டுகள்

சருமவழற்சிக்கு சில நேரங்களில் கார்டிகோஸ்டெராய்டுகளைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. இவை அரிக்கும் தோலழற்சியை குணப்படுத்துவதில்லை, ஆனால் பெரும்பாலான நிகழ்வுகளில் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும் மட்டுப்படுத்துவதிலும் சிறந்த ஆற்றலுள்ளவையாக உள்ளன[6]. சிறிய-மிதமான அரிக்கும் தோலழற்சிக்கு ஒரு வார காலம் ஸ்டிராய்டு (எ.கா. ஹைட்ரோகார்டிசோன் அல்லது டெசோனைடு) வழங்கப்படலாம், அதுவே தீவிர நிலையாக இருப்பின் அதற்கு அதிக செறிவுள்ள ஸ்டிராய்டு (எ.கா. கிலோபெஸ்டால் புரோப்பினேட், ஃப்ளூவோசினோனைடு) தேவைப்படும். கிளோபெடாசோன் பியூட்டைரேட் (எமோவேட்), எஸ்டாமெத்தாசோன் வேலரேட் (பெட்னோவேட்) அல்லது டிரையம்சினோலோன் போன்ற மித-செறிவு காஸ்டிரோஸ்டிராய்டுகளும் கிடைக்கின்றன. பொதுவாக மருத்துவர்கள் அதிக செறிவு மருந்துகளுக்கு முன்பு குறைந்த செறிவு மருந்துகளையே பரிந்துரைப்பார்கள். பல நாடுகளில் பலவீனமான ஸ்டிராய்டுகளை மருந்து கடைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம் (எ.கா., UK, அமெரிக்கா, ஜெர்மனி, செக் குடியரசு, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் ஹைட்ரோகார்ட்டிசோன் இவ்வாறு கிடைக்கும்), ஆனால் அதிக செறிவு மருந்துகளுக்கு மருத்துவரின் பரிந்துரை அவசியம்.

பக்க விளைவுகள்

நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுவந்த அந்த உள்நாட்டு மருந்துகளால் அதிக பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது, தோல் மெல்லியதாகி உடையக்கூடிய தன்மையை (செயலிழத்தல்) அடையும் ஒரு குறைபாடு இதில் பொதுவான ஒன்றாக இருந்தது.[7]. இதனால் முகத்திலோ அல்லது மென்மையான சருமப் பகுதிகளில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் குறைந்த செறிவுடைய ஸ்டிராய்டுகளையே பயன்படுத்த வேண்டும். கூடுதலாக, அதிக வலிமை கொண்ட ஸ்டிராய்டுகள் பெரிய பகுதிகள் அல்லது மூடிய விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும் குறிப்பிடத்தக்க அளவு உடலில் சென்றுவிட்டால் அதனால் ஹைப்போதலாமிக்-பிட்யூட்டரி-அட்ரினல் அச்சு ஒடுக்கம் (HPA அச்சு ஒடுக்கம்) ஏற்படுகிறது[8]. இறுதியாக அவற்றில் உள்ள சாத்தியமுள்ள எதிர்ப்புசக்தியொடுக்கச் செயலின் காரணமாக, அவற்றை நோய்க்கிருமிக் கட்டுப்படுத்திகள் அல்லது கிருமியெதிர்ப்பு மருந்துகள் இன்றி எடுத்துக்கொள்வதால் சில தோல் நோய்த்தாக்கங்கள் ஏற்படலாம் (பூஞ்சைக்கானது அல்லது பேக்டீரியாவுக்கானதுl). மேற்பூச்சு கார்டிகோஸ்டிராய்டுகளைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் கண்களில் அவை பட்டால் கிலோகாமா [9] அல்லது கண்புரைகள் ஏற்படலாம்.

இவ்வகை மருந்துகளுடன் தொடர்புடைய ஆபத்துகளின் காரணமாக சரியான வலிமையுடைய ஸ்டிராய்டை மட்டுமே அதுவும் அரிக்கும் தோலழற்சியின் ஒரு காலப் பகுதியை மட்டும் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். விரும்பிய பதில்வினை ஏற்பட்டவுடன் அதைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக பராமரிப்பு மருத்துவமாக பூச்சுககளைப் பயன்படுத்த வேண்டும். கார்டிகோஸ்டெராய்டுகள் பொதுவாக, குறுகிய காலம் முதல் இடைநிலைக் காலம் வரையிலான அரிக்கும் தோலழற்சி பாதிப்பைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்த பாதுகாப்பானவை. மேலும் இவற்றைப் பயன்படுத்துகையில் ஸ்டிராய்டற்ற களிம்புகளின் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளும் இருப்பதில்லை[10].

இருப்பினும், மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படும் கார்டிகோஸ்டெராய்டுகள் தோல் தடித்தல், விரிவாக்க குறிகள் அல்லது HPA அச்சு ஒடுக்கம் ஆகிய ஆபத்துகளை குறிப்பிடுமளவு அதிகரிப்பதில்லை என சமீபத்திய ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. மேலும் அவ்வாறு அச்சு ஒடுக்கம் ஏற்பட்டாலும் அது மிகவும் சிறிதளவே இருக்கிறது (மேலும் கார்டிகோஸ்டெராய்டுகள் பயன்படுத்தப்படும் காலம் குறைவாக இருப்பின் பயன்பாட்டை நிறுத்திய பின்னர் அவை மீண்டும் உடனடியாக சரியாகக் கூடியவையாகவே உள்ளன). மேலும், இந்தப் பக்க விளைவுகளின் பயத்தின் காரணமாக தோல் வியாதி நிலைகள் குறைவான சிகிச்சைக்கே உட்படுத்தப்படுகின்றன. இதனால் வழக்கமான பயன்பாட்டு வழிமுறைகள் "அவ்வப்போது பயன்படுத்தவும்" என்பதிலிருந்து "பாதிக்கப்பட்ட பகுதியை மூடுமளவுக்கு போதிய அளவு பயன்படுத்தவும்" என்று மாற்ற வேண்டும் என்றும் "விரலளவு அலகுகள்" அல்லது FTUகளைப் பயன்படுத்தும் வழிமுறைகளில் FTUகளை விவரிப்பதற்கான படங்களும் இருக்க வேண்டும் என சில சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்க வழியேற்பட்டது.[11]

பிற வடிவங்கள்

தீவிர நிலைகளில், புரெட்னிசோலோன் போன்ற வாய்வழி ஸ்டிராய்டு மருந்துகள் அல்லது டிரையம்சினோலோன் போன்ற ஊசிகள் ஆகியவை பரிந்துரைக்கப்படலாம். இதனால் விரைவான முன்னேற்றம் காணப்படும் எனினும், அவற்றை நீண்டகாலத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது, மேலும் பெரும்பாலும் அரிக்கும் தோலழற்சியானது மருத்தெடுத்தலை நிறுத்தியவுடன் தனது முந்தைய நிலைக்குச் செல்வது வழக்கம். டிரையம்சினோலோன் ஊசிகளைப் பெறுத்தவரை ஒவ்வொரு சிகிச்சைக் கட்டத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியமாகும்.

எதிர்ப்புசக்தி ஒழுங்குபடுத்திகள்

பைமெக்ரோலியம்ஸ் (எல்டியல் மற்றும் டக்ளான்) மற்றும் டக்ரோலியம்ஸ் (ப்ரோடோபிக்) போன்ற மேற்பூச்சு எதிர்ப்புசக்தி ஒழுங்குபடுத்திகள், கார்டிகோஸ்டெராய்டு சிகிச்சைகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டன, இவை பெருமளவு நபர்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தி சிறந்த விளைவுகளைக் கொடுத்தன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்தத் தயாரிப்புகளால் நிணநீர் முடிச்சு அல்லது தோல் புற்றுநோய் ஏற்படும் சாத்தியக்கூறு இருப்பதாகக் கூறும் ஒரு பொது உடல்நல அறிவுரையை வெளியிட்டுள்ளது[12], ஆனால் பல தொழில்முறை நிறுவனங்கள் FDAஇன் கருத்தை மறுத்துள்ளன.

  • இந்த மருந்துகளால் தடுக்கப்படும் புற்றுக்கு முந்தைய நிலை இயல்புபிறழ்ந்த சில செல்களை அகற்றும் செயலில் நோய் எதிர்ப்பு சக்தி உதவும் என்பதே இதன் கருத்தாகும். இருப்பினும், இயல்பிலேயே அதிக வளர்சிதைமாற்றம் மற்றும் செல் பெருக்கம் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ள அரிக்கும் தோலழற்சி போன்ற நாள்பட்ட அழற்சி நிலைகளில் எதுவாயினும் அவை புற்று நோயுடன் தொடர்புள்ள ஆபத்தை சிறிதளவே கொண்டுள்ளன (போவன் வியாதி என்பதைக் காண்க).
  • இதை முக்கிய உண்மையான விவகாரமாகக் கருதாமல் விட்டுவிடுவதே இங்கிலாந்தின் சருமவழற்சி மருத்துவர்களின் நடப்பு வழக்கமாக உள்ளது. மேலும் அவர்கள் இந்த புதிய மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர்.[13] இந்த நிலையின் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமானது பாதிக்கப்பட்டவர்களின் (மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதிப்பால் மனமுடைந்துள்ள குடும்பங்களின்) வாழ்வின் தரத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தைக் கொடுக்க முடியும். இங்கிலாந்தின் முக்கிய விவாதம் இது போன்ற புதிய சிகிச்சை முறைகளின் செலவைப் பற்றியதே ஆகும். இதில் வரையறுக்கப்பட்ட NHS வளங்களை, அதுவும் அவை தேவை என்ற சரியான சூழலில் மட்டுமே பயன்படுத்துவதையும் கருத்தில் கொண்டு இது கூறப்படுகிறது.[14]
  • புற்று நோய் ஆபத்துடன் கூடுதலாக, பலவகைப்பட்ட மருந்துகளுடன் கூடிய பிற சாத்தியமுள்ள பக்க விளைவுகளும் உள்ளன. கடுமையான சிவத்தல்கள், ஒளியுணர்தன்மை கொண்ட பதில்வினை தன்மை உள்ளிட்ட மோசமான பதில்வினைகள் மற்றும் சிறிதளவு ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கும் அதிக மருந்து இடைசெயல் வினைகள் ஏற்படும் சாத்தியக்கூறும் உள்ளது.[15]

நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்கள்

சாதரணமான சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (வறண்டு போதல், வெடிப்பு விடுதல்), அதனால் பேக்டீரியா உள் நுழைவது எளிதாகிவிடுகிறது. நோயாளி சொறிவதன் காரணமாக நோய்த்தாக்கம் ஏற்படுவதோடல்லாமல் அது பல இடங்களுக்கும் பரவவும் செய்கிறது. இதற்கு மேலும் ஏற்படும் தோல் நோய்த்தாக்கத்தினால் தோலில் எரிச்சல் ஏற்பட்டு தோல் பலவீனமடையக்கூடும். இதற்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்புப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்ப்பு சக்தி ஒடுக்கிகள்

அரிக்கும் தோலழற்சி தீவிரமாக இருந்து பிற வகை சிகிச்சைகளுக்கு அது குணப்படாவிட்டால், சில நேரங்களில் எதிர்ப்புசக்தி ஒடுக்கி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை தாக்கி, நோயாளியின் அரிக்கும் தோலழற்சி பாதிப்பில் சிறந்த மாற்றங்களை உண்டுபண்ணக்கூடும். இருப்பினும், எதிர்ப்புசக்தி ஒடுக்கிகள் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இது பொன்ற சந்தர்ப்பங்களில் நோயாளிகள் அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளவும் மருத்துவரால் கண்காணிக்கப்படவும் வேண்டும். இங்கிலாந்தில், சிக்லோஸ்போரின்(சைக்ளோஸ்போரின்), அஸ்தியோப்ரைன் மற்றும் மெத்தோட்ரெக்ஸேட் ஆகியவையே அரிக்கும் தோலழற்சி சிகிச்சைக்காக பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் எதிர்ப்புசக்தி ஒடுக்கிகளாகும். இந்த மருந்துகள் பொதுவாக பிற வியாதிகளுக்காக உருவாக்கப்பட்டவை, ஆனால் அரிக்கும் தோலழற்சிக்கும் சிறந்த குணப்படுத்தும் விளைவுகளைக் கொடுக்கின்றன. ஸ்டிராய்டு புரெட்னிஸ்டோன் என்பதே அமெரிக்காவில் அரிக்கும் தோலழற்சிக்கான எதிர்ப்புசக்தி ஒடுக்கியாக பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றது.

நமைச்சல் நிவாரணம்

நமைச்சல்-எதிர்ப்பு மருந்துகள், பெரும்பாலும் ஆண்டிஹிஸ்டமைன், மருந்து தீவிர அரிக்கும் தோலழற்சியின் போது நமைச்சலைக் குறைக்கப் பயன்படுத்தப்படலாம், நமைச்சல் குறைவதன் மூலம் தோலுக்கு ஏற்படும் சேதமும் எரிச்சலும் குறைகிறது (நமைச்சல் சுழற்சி ).[சான்று தேவை], இருப்பினும், அரிக்கும் தோலழற்சியில், இந்த மருந்துகள் நமைச்சலைக் குறைப்பதற்கு அவற்றின் ஆண்டிஹிஸ்டமைன் விளைவைக்காட்டிலும் அவற்றின் ஆறுதலளிக்கும் பக்க விளைவே காரணமாக உள்ளது. ஆகவே, புரோமித்தஸைன் (ஃபெனர்ஜான்) அல்லது டைஃபின்ஹைட்ரமின் (பெனட்ரில்) போன்ற ஆறுதலளிக்கும் ஆண்டிஹிஸ்டமைன்கள் நமைச்சல் நிவாரணத்தில், புதிய ஆறுதலளிக்காத ஆண்டிஹிஸ்டமைன்களைக் காட்டிலும் சிறந்த விளைவைக் கொடுப்பவையாக உள்ளன. முதலை எண்ணெய் நமைச்சலுக்கு சிறந்த பிரபலமான நிவாரணியாகும், அது வணிகரீதியாகவும் இப்போது கிடைக்கிறது.

கேப்சேசின் தோலில் பயன்படுத்தப்படும் போது எரிச்சல் எதிர்ப்பானாகச் செயல்படுகிறது (காண்க: நரம்பு சமிக்ஞை கடத்தலின் கேட் கண்ட்ரோல் கோட்பாடு).

ஹைட்ரோகார்ட்டிஸோன் தோலில் பூசப்படும்போது தற்காலிக நமைச்சல் நிவாரணியாக செயல்படுகிறது.

வறண்ட சரும விளைவைத் தவிர்த்தல்

ஈரப்பதமூட்டுதல்

அரிக்கும் தோலழற்சியானது சரும வறட்சியால் மிகவும் மோசமாகக்கூடும். ஈரப்பதமூட்டுதல் என்பது அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சுய-கவனிப்பு சிகிச்சை முறைகளில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதால் தோல் ஆறுதல் மற்றும் நிவாரண குறிகள் தோன்றுவது எளிதாகும்.

சோப்புகள் மற்றும் கடின டிட்டர்ஜெண்ட்டுகளை பாதிக்கப்பட்ட சருமப்பகுதியில் படுமாறு பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் அவை இயற்கையான சரும எண்ணெய்களை அகற்றி தோலை மேலும் வறட்சியாக்கக்கூடும். மாறாக, ஈரப்பதமூட்டும் உடல் கழுவல் பொருள்கள் அல்லது அக்வாஸ் கரைசல் போன்ற களிம்பு வகைகளைப் பயன்படுத்தினால், இயற்கையான சரும எண்ணெய் பாதுகாக்கப்பட்டு அதனால் தோலை ஈரப்பதமூட்டும் தேவைகளில் சில குறைகின்றன. கூழ்ம ஓட் உணவு வகைகளைப் பயன்படுத்திக் குளிப்பது மற்றொரு வழியாகும். சோப்புகளைத் தவிர்ப்பதுடன், சருமத்தை வறட்சியாக்கும் முகப் பூச்சுகள் அல்லது பெர்ஃபியூம்கள் போன்ற பிற தயாரிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.

ஈரப்பதமூட்டும் பொருள்கள் 'களிம்புகள்' என அழைக்கப்படும். பொதுவாக, உரியும் தன்மையுள்ள சருமம் உடையவர்கள் கெட்டியான களிம்புகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மிகவும் வறண்ட சருமத்தில் அக்வாஸ் கிரீம் போன்றவை சிறந்த விளைவுகளை வழங்காமல் போகலாம். செபெக்சால், எப்பாடெர்ம் களிம்பு, எக்ஸெடெர்ம் மற்றும் யூசரின் லோஷன் அல்லது கிரீம் போன்றவை நமைச்சலுக்கு ஆறுதலளிப்பதில் உதவியாக இருக்கக்கூடும். ஈரப்பதத்தைத் தக்கவைக்க லோஷன்கள் அல்லது கிரீம்களை குளித்து முடித்தவுடன் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தலம். தூங்கும்போது ஈரப்பதமூட்டும் கையுறைகளை (கைகளில் ஈரப்பதமூட்டும் களிம்புகளை எப்போதும் படும்படியே வைத்திருக்கும் கையுறைகள்) அணிந்துகொள்ளலாம். பொதுவாக, களிம்புகளை ஒரு நாளுக்கு இரு முறை பயன்படுத்துவது சிறந்த பயனைக் கொடுக்கும். கிரீம்களைப் பயன்படுத்துவது எளிது, மேலும் அவை உடனடியாக தோலில் உறிஞ்சிக்கொள்ளப்படுவதால் மீண்டும் மீண்டும் அவற்றைப் பூசுவது அவசியமாகும். களிம்புகள் குறைந்த நீர்ப் பொருள்களைக் கொண்டுள்ளதால், அவை அதிக நேரம் தோலிலேயே தங்கியிருக்கும், ஆகவே அவற்றை சில முறை மட்டுமே பூசினால் போதும், ஆனால் அவை பிசுபிசுப்புடன் கொஞ்சம் சங்கடம் தரக்கூடும். ஸ்டிராய்டுகளை களிம்புகளுடன் கலந்தும் பயன்படுத்தலாம்.

உடையாத சருமத்திற்கு, களிம்புடன் கூடிய அல்லது களிம்பல்லாத நீர் எதிர்ப்புசக்தி கொண்ட டேப்பை நேரடியாக பயன்படுத்துவதால் அல்லது பரிந்துரைக்கப்பட்ட களிம்பைப் பயன்படுத்துவதால் தோலின் ஈரப்பதம் மேம்பட்டு, இதனால் சரும குணமடைதல் ஊக்கப்படக்கூடும். இந்த சிகிச்சைத் திட்டமானது தோல் வெடிப்பு விடுதலையும் தடுக்கும், நமைச்சல் தொந்தரவிற்கும் இது ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். இதன் இறுதி விளைவாக தோல் தடித்தல் குறைகிறது (தொடர்ந்து சொறிவதால் தோல் தடிமான தன்மை). சந்திப்புகளுக்கு தொலைவில் அமைந்துள்ள சருமத்திற்கு கட்டுப் போடுதல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

குளியல் என்பது சிறந்ததா அல்லது கெட்டதா என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சருமம் வறட்சியாதலைத் தடுப்பதற்காக தினமும் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மாயோ கிளினிக் அறிவுரைக்கிறது.[16]. அதே சமயம், "குளிப்பதால் சருமம் வறண்டு போகும் என்பது தவறான கருத்து, மேலும் குறைந்தபட்ச நேரமாவது நிர்வாணமாக காற்று படும்படி இருக்க வேண்டும்" என சருமவழலுக்கான அமெரிக்க அகாடமி கூறுகிறது, மேலும் அது சரும நீரேற்றத்தையும் பரிந்துரைக்கிறது. அவர்கள் தீவிர அரிக்கும் தோலழற்சி உள்ளவர்களுக்கு ஒரு நாளுக்கு 3 முறை சிறிய குளியல் எடுப்பதையும் பரிந்துரைக்கின்றனர். அவர்களின் கருத்துப்படி, தோலில் குளியலால் ஈரப்பதத்தைத் தக்கவைக்க 3 நிமிடங்களுக்குள் ஓர் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்த வேண்டும்.[17] அமெரிக்க தேசிய அரிக்கும் தோலழற்சி சங்கம் பரணிடப்பட்டது 2010-04-28 at the வந்தவழி இயந்திரம் மற்றும் கனடாவின் அரிக்கும் தோலழற்சி அமைப்பு ஆகியவையும் இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியுள்ளன.[18] [19]

அவ்வப்போது அல்லது கொஞ்சம் குறைவான முறை குளிப்பது என்பது முக்கியமல்ல, குளிக்கும் நீரின் கடினத் தன்மையே முக்கியக் காரணி ஆகும். தற்போது கடின நீரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் அரிக்கும் தோலழற்சி நோயாளிகளுக்கு, மென்னீரானது சிகிச்சைப் பலன்களை வழங்கக்கூடும். நீரின் கடினத் தன்மையைக் குறைக்க, அயனிப் பரிமாற்ற நீர் மென்மைப்படுத்திகளைப் பயன்படுத்தலாம் (இதற்கு பிளம்பிங் வேலைகள் அவசியமாகும்).[20] [21]

சமீபத்தில், ஸ்டேட்டம் கார்னியத்தின் பிரதான லிப்பிடு உள்ளடக்கியான செராமைடுகள், அரிக்கும் தோலழற்சியின் சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[22][23][24] தற்கால ஈரப்பதமூட்டிகளில் பெரும்பாலும் அவையே உள்ளடக்கப் பொருளாக உள்ளன. இந்த லிப்பிடுகள் ஆய்வகத்தில் செயற்கைத் தொகுப்பு முறையிலும் வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.[25]

அரிக்கும் தோலழற்சியும் தோல் சுத்தப்படுத்திகளும்

அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் மிகவும் அவசியமானாலொழிய கடினமான வகை டிட்டர்ஜெண்ட்டுகளை தங்கள் சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களுக்கான பரிந்துரைகளில் ஒன்றாகும்[26]. அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நீரினால் தங்கள் தோலிலிருந்து அழுக்கைக் களைய முடியாதபட்சத்தில் மட்டுமே இவ்வகை சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்தி தங்கள் நமைச்சலைக் குறைக்கலாம்.

இருப்பினும், தற்கால சூழலில், டிஷுக்கள் போன்ற பொருள்களில் டிட்டர்ஜெண்ட்டுகள் அதிக அளவில் எங்கும் காணப்படுபவையாக உள்ளதால், பரப்பில் அதிக நேரம் இருக்கக்கூடியவையாகவும் இருப்பதால், அரிக்கும் தோலழற்சியைக் கட்டுப்படுத்த அவற்றை தோலிலிருந்து அகற்ற "சேஃப்" சோப்புகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. அரிக்கும் தோலழற்சிக்கான பெரும்பாலான பரிந்துரைகள் "டிட்டர்ஜெண்டுகள்" மற்றும் "சோப்புகள்" போன்ற பதங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றன. மேலும் அவை இரண்டையுமே தவிர்க்குமாறு அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுறுத்துகின்றன, ஆனால் டிட்டர்ஜெண்ட்டுகளும் சோப்புகளும் ஒன்றல்ல. மேலும் அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒரே அளவிலான விளைவைக் கொடுப்பதில்லை. டிட்டர்ஜெண்ட்டுகள், பெரும்பாலும் பெட்ரோ வேதிப்பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன. மேலும் சோப்பும் நீரும் மட்டுமே செய்ய முடியாத வகையில் தோல் மென்சவ்வுகளின் உட்புகுதிறனை அதிகரிக்கின்றன. வீட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் டிட்டர்ஜெண்ட்டான சோடியம் லாரில் சல்பேட்டு, பிற ஒவ்வாமை தரக்கூடிய பொருள்களின் ஒவ்வாமை விளைவை அதிகரிப்பதாக் கண்டறியப்பட்டுள்ளது ("ஆண்டிஜன் ஊடுருவலை அதிகரிக்கிறது").[27]

துரதிருஷ்டவசமாக, அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பரிந்துரைக்கப்படும் சரும சுத்தப்படுத்திகளுக்கான ஒருமித்த பரிந்துரை எதுவும் இல்லை. வெவ்வேறு தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் நிதியளித்து செய்யப்பட்ட வெவ்வேறு மருத்துவ சோதனைகள், வெவ்வேறு தயாரிப்புகளின் குறிப்பிட்ட பண்புகளை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிராண்டுகள் மிகவும் சருமத்திற்கு சிறந்த நன்மை வழங்குபவையாகப் பரிந்துரைத்தன, மேலும் சருமத்திற்கு சிறந்தது எது என்பதைத் தீர்மானிப்பதற்கான வெவ்வேறு அடிப்படைகளையும் அவை வழங்கின. "ஹைப்போஅலர்ஜனிக்" மற்றும் "டாக்டர் டெஸ்டட்" போன்ற சொற்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை,[28] மேலும் "ஹைப்போஅலர்ஜனிக்" என்று லேபிளிடப்பட்ட தயாரிப்புகள் உண்மையிலேயே பிற தயாரிப்புகளைவிட குறைந்த சிக்கலுண்டாக்குபவை தானா என்பதற்கான எந்த ஆராய்ச்சியும் நிகழ்த்தப்படவும் இல்லை. கக்கங்கள், தொடை இடுக்குகள் மற்றும் ஆசனவாய்ப் பகுதிகள் ஆகியவை தவிர்த்து மற்ற பகுதிகளில் சோப்புகள், டிட்டர்ஜெண்ட் சுத்தப்படுத்திகள் ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதை தவிர்ப்பதே சிறந்தது, மேலும் அக்வாஸ் கிரீம் போன்ற மலிவான சாதாரண களிம்புகளை குளியல் அல்லது ஷவருடன் பயன்படுத்தலாம்.

பொதுவாக சோப்பைத் தேர்வு செய்வது பற்றிய சருமவழற்சிப் பரிந்துரைகளில் இவை உள்ளடங்கும்:[சான்று தேவை]

  • கடினமான டிடர்ஜெண்ட்டுகள் அல்லது வறட்சி சோப்புகளைத் தவிர்க்கவும்
  • எண்ணெய் அல்லது கொழுப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சோப்பைத் தேர்வு செய்யவும்
  • வாசனையற்ற சோப்பைப் பயன்படுத்தவும்
  • சோப்பின் விளைவை முழுவதுமாக அறிந்துகொள்ளும் வரை, ஒரு சோப்பை உடலின் குறிப்பிட்ட சிறு பகுதியில் மட்டும் பயன்படுத்தி, பேட்ச் சோதனை செய்து பார்க்கவும்
  • சோப்பை அடிப்படையாகக் கொண்டிருக்காத சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்தவும்[29]

சோப்பைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:

  • சோப்பைக் கொஞ்சமாகப் பயன்படுத்தவும்
  • குளியல் துணிகள் (வாஷ்க்ளோத்ஸ்), ஸ்பாஞ்சுகள் அல்லது பீர்கங்காய் அல்லது உடலைத் தேய்க்கும் பொருள் எதனையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
  • அவசியமான பகுதிகளில் மட்டும் சோப்பைப் பயன்படுத்தவும்
  • குளியல் முடியும் போது மட்டுமே சோப்பைப் பயன்படுத்தவும்
  • உலர்த்துவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மணமற்ற, தடுப்புத் தன்மை கொண்ட ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்தவும்
  • ஒவ்வாமைக்கான சாத்தியங்களைத் தவிர்க்க, லோஷன், சோப்பு அல்லது பெர்ஃபியூம்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்கவும். இது பற்றிய உங்கள் மருத்துவரின் பரிந்துரையைப் பெறவும்
  • சருமத்தை உலர்ந்த நிலையில் தேய்க்க வேண்டாம், அப்படி செய்தால் உடலின் ஈரப்பதம் துண்டுக்குச் சென்றுவிடுமே தவிர உங்கள் உடலில் தங்கியிருக்காது, அதற்குப் பதிலாக லேசாக தட்டிக்கொடுக்கும் வகையில் துடைக்கவும்

சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்

அரிக்கும் தோலழற்சியானது சில நேரங்களில் வீட்டுக் குப்பை சிற்றுண்ணிகளின் கழிவினால் ஏற்படும் ஒவ்வாமையால் கூட ஏற்படலாம்[30] எனக் கூறப்படுகிறது, மேலும் மக்களில் 5% மட்டுமே சிற்றுண்ணிகளுக்கான எதிர்ப்பொருளைக் கொண்டுள்ளனர்[31], மேலும் இதன் ஒட்டுமொத்த விளைவைப்பற்றிய ஆவணமாக்கம் தேவைப்படுகிறது.[32]

பல்வேறு நடவடிக்கைகள் சிற்றுண்ணி ஆண்டிஜென்களைக் குறைக்கின்றன, குறிப்பாக கடினமான பரப்புகளில் கார்ப்பெட்டுகளைப் பயன்படுத்துதல்.[33] வேக்யூம் கிளீனர்களின் விளைவுத்திறனானது கார்பெட் பைலின் இயல்பைப் பொறுத்ததாக உள்ளது[34] ஆனால் மற்ற ஆய்வுகளில் தினசரி வேக்யூம் முறையில் சுத்தப்படுத்துதல் சிற்றுண்ணிகளின் அளவு பாதிக்கப்படுவதில்லை எனக் காண்பிக்கப்பட்டுள்ளது.[35] இருப்பினும், இவ்வகை நடவடிக்கைகளால் அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பலனுள்ளதா என்பதில் தெளிவான கருத்து இல்லை. காற்றுப் பரிமாற்ற வீதங்கள், ஒப்பு ஈரப்பதன் மற்றும் அறைவெப்பநிலை (ஆனால் தூசி சிற்றுண்ணிகளின் அளவு அல்ல) போன்ற பல சுற்றுப்புறக் காரணிகள் இந்த நோய் நிலையின் மீது விளைவை ஏற்படுத்துகின்றன என ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு பரிந்துரைத்துள்ளது.[36]

ஸ்டேஃபிலோகாக்கஸ் ஆரியஸ் தொகுப்புகள் அதீத சொறியும் அரிக்கும் தோலழற்சியினால் உருவாகின்றன. நார்த்வெஸ்ட் யுனிவெர்சிட்டியின் 2009 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், மிதமான அல்லது தீவிரமான அரிக்கும் தோலழற்சி கொண்ட சிறார்க்கு நீர்த்த பிளீச் குளியல் கொடுக்கப்பட்டது, அப்போது அவர்களின் நோய் பாதிப்பு குறைந்ததாக அறியப்பட்டது.[37] நீர்த்த பிளீச் பேக்டீரிய எதிர்ப்பு சக்தி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், நீர்த்த என்பது அரை கோப்பை பிளீச்சை ஒரு தொட்டி நீரில் கரைத்தல் என்பதைக் குறிக்கும், மேலும் குளியல் என்பது 5–10 நிமிடங்கள் நனைத்தலைக் குறிக்கும். பேக்டீரிய எதிர்ப்பு குளியல் எண்ணெய்களில் டிரைக்ளோசான் அல்லது பெஞைல்கோனியம் குளோரைடு போன்ற எதிர்ப்புப்பொருள்கள் உள்ளன, இவை சரும ஈரப்பதமூட்டல் மற்றும் ஸ்டாஃபிலோகாக்கஸ் ஆரஸை ஒடுக்குதல் ஆகிய தேவைகளுக்குக் கிடைக்கின்றன. ஆயிலேட்டம் பிளஸ் மற்றும் QV ஃப்ளேரப் ஆயில் ஆகியவை பிராண்டு பெயர்களாகும்.

ஒளி சிகிச்சை

புற ஊதா ஒளியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒளி சிகிச்சை (அல்லது ஆழ் ஊடுருவல் ஒளி சிகிச்சை) அரிக்கும் தோலழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.[38] பெரும்பாலும் UVA பயன்படுத்தப்படுகிறது, ஆனால் UVB மற்றும் குறும் கற்றை UVB ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன. புற ஊதா ஒளிக்கு அதிகமாக உட்படுதலில் சில ஆபத்துகள் உள்ளன, குறிப்பாக தோல் புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறு உள்ளது.[39]

ஒளி சிகிச்சையானது செயல்திறனற்றதாகக் காணப்படும்பட்சத்தில், அந்த சிகிச்சையுடன் சேர்த்து சோரலேன் என்ற பொருளைப் பயன்படுத்துதலும் (அல்லது உட்செலுத்துதல்) பயன்படுத்தப்படுகிறது. இந்த PUVA (சோரலேன் + UVA) சேர்க்கை சிகிச்சையானது ஒளி-வேதி சிகிச்சை எனப்படுகிறது. சோரலேன்கள் தோலை UV ஒளிக்கான உணர்திறன் அதிகரிக்கச் செய்து குறைந்த வலிமையுள்ள UVA கதிர்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இருப்பினும், UV ஒளிக்கான அதிக உணர்திறனும் நோயாளிக்கு தோல் புற்று நோய் உண்டாவதற்கான அதிக ஆபத்து சாத்தியக்கூறை வழங்குகிறது.[40]

உணவுக்கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்துணவு

உணவு ஒவ்வாமை அட்டோபிக் சருமவழற்சியைத் தூண்டலாம் என்பதற்கான குறிப்புகளை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த நபர்களுக்கு, ஒவ்வாமைப் பொருள்கள் எவை என்பதைக் கண்டுபிடிப்பது தவிர்க்கும் உணவுக்கட்டுப்பாட்டுக்கு வழிகோலுவதன் மூலம் அறிகுறிகளைக் குறைக்க உதவும், இருப்பினும் இந்த அணுகுமுறையானது இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளது.[41] அரிக்கும் தோலழற்சியைத் தூண்டிவிடக்கூடிய உணவுப்பொருள்களாக அறியப்பட்டவற்றில் பின்வருவனவும் உள்ளடங்கும்: பால் பொருள்கள், காபி (காஃபினேற்றப்பட்டது மற்றும் காஃபின் நீக்கப்பட்டது), சோய்பீன் பொருள்கள் முட்டைகள், கொட்டை வகைகள், கோதுமை மற்றும் மக்காச்சோளம் (இனிப்பு சோளம்), இருப்பினும் உணவு ஒவ்வாமையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.[சான்று தேவை] இருப்பினும், 2009 இல், ஆராய்ச்சியாளர்கள் நேஷனல் ஜியூவிஷ் மெடிக்கல் அண்ட் ரிசர்ச்ச் செண்டரின் ஆராய்ச்சியாளர்கள் அரிக்கும் தோலழற்சி நோயாளிகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக தவறாக அறுதியிடப்படுவதைக் கண்டறிந்தனர்.[42][43]

சமீபத்தில் மர்கிட்டா வோர்ம் மற்றும் பலர் ஒமேகா-3 அதிகமாக (மற்றும் ஒமேகா-6 குறைவாக உள்ள) பாலிநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உணவுகள் இந்த அறிகுறிகளைக் குறைக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர்.[44]

மாற்று சிகிச்சைமுறை

சீன மரபு மருத்துவம் மற்றும் மேற்கத்திய மூலிகை மருத்துவம் ஆகியவை மரபு சாரா மருத்துவ அணுகுமுறைகளில் அடங்கும். பல வகை சிகிச்சைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் செயல்திறன் மற்றும் தொந்தரவில் ஒவ்வொருக்கும் மாறும் செயல்திறனைக் கொண்டுள்ளன. நோயாளிகள் இது போன்ற மருத்துவ முறைகளைப் பின்பற்றிவந்தால், மருத்துவர்களிடம்/ஒவ்வாமை மருத்துவர்களிடம்/சருமவழற்சி மருத்துவர்களிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற மருத்துவத் தீர்வுகளில் பின்வருவன அடங்கும்:

  • ஓட் உணவு என்பது நமைச்சலைத் தீர்ப்பதற்கான பொதுவான தீர்வாகும், இதை குளிக்கையில் கிரீமாக அல்லது கூழ்மமாக நேரடியாக மேற்பரப்பில் பயன்படுத்தலாம். அரிக்கும் தோலழற்சி சிகிச்சை மற்றும் பிற தோல் வியாதி நிலைகளுக்காக தயாரிக்கப்படும் பிற மருந்துகளிலும் இடம்பெறும் வணிக ரீதியாகக் கிடைக்கும் ஓர் உட்பொருளாகவும் உள்ளது. ஆனால், சில சமீபத்திய ஆய்வுகள் சில நோயாளிகளில் இதன் தீவிரத் தன்மையை அதிகரிக்கக்கூடும் எனக் கூறுகின்றன.[சான்று தேவை]
  • கடல் நீர்: பிரித்தானிய அசோசியேஷன் ஆஃப் டெர்மெட்டாலஜிஸ்ட்ஸ் இன் கருத்துப்படி, அட்டோபிக் அரிக்கும் தோலழற்சி உள்ள குழந்தைகளுக்கு உப்பு நீர்க்குளியல் சிறிதளவு பயன் தந்திருப்பதற்கான அறிக்கையிடப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.[45] கடல் நீரில் நோய்க்கிருமியழிப்பு குணங்கள் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சாக்கடல் தோல் வியாதிகளுக்கு நிவாரணமளிப்பதில் மிகவும் பிரபலமானதாகும்.
  • அரிக்கும் தோலழற்சிக்கு நிவாரணமளிக்க, கந்தகம் மேற்பூச்சு சிகிச்சை மருந்தாக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது, இருப்பினும் இது ஒடுக்கும் பண்புடையதாக இருக்கலாம். அது விக்டோரியா மற்றும் எட்வார் ஆட்சிக் காலத்தில் நாகரீகமாகக் கருதப்பட்டது. இருப்பினும், கந்தக சிகிச்சை அரிக்கும் தோலழற்சியிலிருந்து நிவாரணமளிக்கிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை.[46]
  • புரோபியாட்டிக்ஸ் வாய்வழி உட்கொள்ளும் நுண்ணுயிரிகளாகும், தயிரில் உள்ள லாக்டோபேசில்லஸ் பேக்டீரியா இதற்கொரு எடுத்துக்காட்டாகும். அவை வயதான நபர்களில் அரிக்கும் தோலழற்சிக்கான சிகிச்சையாகப் பயன்படுத்துகையில் அதிக செயல்திறன் மிக்கவையாக இல்லை, ஆனால் சில வகை நன்மை தரும் நுண்ணுயிர்கள் ஒவ்வாமை, ஆஸ்த்துமா மற்றும் அரிக்கும் தோலழற்சி ஆகிய மூன்றையும் தடுக்கும் திறனை வழங்குகின்றன சில ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன, இருப்பினும் அரிய சந்தர்ப்பங்களில் குறைவான எதிர்ப்புசக்தி பதில்வினை கொண்டவர்களில் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை அவை வழங்குகின்றன.[47][48]
  • சீன மரபு மருத்துவம்: அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மிட்டாலஜியின் கருத்துப்படி, சீன மரபு மருத்துவத்தின் சில வகை மருந்துகள் அரிக்கும் தோலழற்சியைக் கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதே நேரம் அவை கொடிய விளைவுகளைக் கொடுக்கக்கூடிய நச்சுத் தன்மையையும் கொண்டுள்ளன.[49] சீன மருத்துவ அறுதியிடலில், அரிக்கும் தோலழற்சியானது உள்ளிருக்கும் அரோக்கியமற்ற உடல் நிலையின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இந்த சிகிச்சையானது நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது, ஆகவே இது அரிக்கும் தோலழற்சியை தீர்ப்பது மட்டுமின்றி வாழ்க்கைத் தரத்தினையும் மேம்படுத்துகிறது (ஆற்றல், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, போன்றவை).[50] மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் மேற்பூட்டு கார்ட்டிகோஸ்டிராய்டு பயன்பாடு குறைதல் ஆகியவற்றை பிரித்தானிய ஜர்னல் ஆஃப் டெர்மெட்டாலஜியினால் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு விவரிக்கிறது[51]. சீன மரபு மருத்துவத்தில் அரிக்கும் தோலழற்சிக்கான சிகிச்சையில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பத்து வெவ்வேறு தாவர வகைகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட மற்றொரு பிரித்தானிய சோதனை, இந்த மூலிகை மருத்துவத்தின் ஒரு நன்மையைப் பரிந்துரைக்கிறது, ஆனால் மறுஆய்வாளர்கள் மறைவுத் தன்மை பராமரிக்கப்படாததால், இதன் முடிவுகளை செல்லாதது எனக் கருதினர்.[52]
  • கரப்பொருத்து சிகிச்சை முதுகெலும்பு சிகிச்சை போன்றவையும் அறிவியல் பூர்வ ஆதாரங்கள் போதிய அளவு இல்லாத சிகிச்சை முறைகளில் அடங்கும்.[53]

அரிக்கும் தோலழற்சியினால் ஏற்படக்கூடிய நமைச்சல், அரிப்பு மற்றும் தோலுரிதல் ஆகியவற்றைக் குறைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான ஆடைகளையும் நோயாளிகள் அணியலாம்.[54]

நடைத்தையியல் அணுகுமுறை

1980களில் ஸ்வீடன் சருமவழற்சி மருத்துவர் பீட்டல் நோரன், நீண்டகால அட்டோபிக் அரிக்கும் தோலழற்சிக்காக நடைத்தையியல் அணுகுமுறை ஒன்றை உருவாக்கினார். இந்த அணுகுமுறை, இலண்டனில் உள்ள செல்சீ அண்ட் வெஸ்ட்மைண்டர் ஹாஸ்பிட்டலில் பணிபுரிந்துவந்த சருமவழற்சி மருத்துவர் ரிச்சர்ட் ஸ்டேட்டன் மற்றும் உளவியலாளர் கிரிஸ்டோபர் பிரிட்கெட் ஆகியோரால் மேலும் மேம்படுத்தப்பட்டது.[55][56] இந்த சிகிச்சையில் நோயாளிகளுக்கு 6 வார சிகிச்சையளிக்கப்படும், அதில் சொறிதல் பழக்கம் மறத்தல் மற்றும் அதன் அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற திட்டங்களும் இடம்பெறும். நீண்ட காலமாக அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொறிதல் என்பது பழக்கமாக மாறிவிடலாம். சில நேரங்களில், சொறிதல் என்பது அனிச்சை செயலாக நடைபெறுகிறது, இதனால் அரிப்பு இல்லாத நிலையிலும் விழிப்புணர்வின்றி தானாகவே சொறிதல் என்பது நிகழ்கிறது. பழக்கம் மறக்கவைத்தல் திட்டமானது வழக்கமான களிம்பு/கார்டிக்கோஸ்டிராய்டு சிகிச்சைகளுடன் சேர்த்தே செயல்படுத்தப்படுகிறது, அப்போது தான் தோல் குணமாகும். எதிர்காலத்தில் அரிப்பையும் அது குறைக்கிறது மேலும் தொடர்ந்து தோலுரிதலுக்கான வாய்ப்பையும் அது குறைக்கிறது. நடத்தையியல் அணுகுமுறை அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்டவருக்கு அரிக்கும் தோலழற்சியின் தீவிரத் தன்மை மீதான குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்பாட்டை வழங்குகிறது.

Remove ads

நோய் பரவல்

அரிக்கும் தோலழற்சி அதிகமாக காணப்படுவதாகக் கண்டறியப்பட்ட மருத்துவப் பதிவுகளுக்குட்பட்ட வாழ் நாள் பகுதி, குழந்தைப் பருவமே ஆகும், பெண்களில் அரிக்கும் தோலழற்சி வெளிப்பாடுகள் அதிகமாகக் காணப்படுவது இனப்பெருக்க காலமான 15–49 ஆண்டுகளிலாகும்.[57] இரண்டாம் உலகப் போருக்கு (1939–45) முந்தைய காலத்தில் அரிக்கும் தோலழற்சி பெருவாரியாகக் காணப்படுவதன் போக்கு பற்றிய ஆதாரத் தரவுகள் குறைவாகவே காணப்பட்டாலும், 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அது அதிகமாகக் காணப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதில் பள்ளி செல்லும் குழந்தைகளில் அரிக்கும் தோலழற்சியின் நிகழ்வு அதிகமாகக் காணப்பட்டது 1940களின் பிற்பகுதி மற்றும் 2000 ஆகிய காலகட்டங்களாக இருந்தது.[58] இங்கிலாந்தின் நோய் பரவல் தரபு பற்றிய மறுஆய்வு ஒன்றும், காலத்தின் அதிகரிப்பில் அரிக்கும் தோலழற்சி பெருவாரியாக நிலவும் போக்கைக் கண்டறிந்துள்ளது.[59] மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட, இங்கிலாந்தில் வாழ்நாள் முழுதும் பாதிக்கப்பட்டிருக்கும் அரிக்கும் தோலழற்சி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையும் அறிக்கையிடப்பட்டுள்ளது, அதன் நிகழ்வுகளின் எண்ணிக்கை 5,773,700 என்று மதிப்பிடப்பட்டுள்ளது அல்லது ஒன்பது பேரில் ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் மருத்துவரால் இந்நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளார்.[60]

Remove ads

ஆராய்ச்சி

தற்போதைய நிலையில் பெரும்பாலான சருமவழற்சி வகைகளுக்கு, அறிகுறிகளுக்கான நேரடி சிகிச்சை முறைகளைத் தவிர்த்து வேறெந்த சிறந்த சிகிச்சையும் இல்லை. கார்ட்டிசோன் சிகிச்சைகளும் எதிர்ப்பு சக்தி மாற்றச் சிகிச்சைகளும் கூட அதிக சிக்கலான பிரச்சனையின் போது சிறிதளவு விளைவயே கொடுக்கக்கூடும். இந்த நிலையானது பெரும்பாலும் ஒவ்வாமை தொடர்பான குடும்ப வரலாறுடன் (ஆகவே மரபுவழித்தன்மையுடனும்) தொடர்புபடுத்தப்படுவதால், மரபியல் சிகிச்சை அல்லது மரபுப் பொறியியல் இதில் உதவியாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ஒவ்வாமைப் பொருள்களின் நொதி தொடர்பான செயல்பாடுகளால் ஏற்படும் சேதங்கள், உடலில் இயல்பாக உள்ள, SPINK5 மரபணுவில் உருவாகும் LEKTI போன்ற புரோட்டீஸ் நிறுத்திகளால் தடுக்கப்படுகின்றன. இந்த மரபணுக்களிலான சடுதிமாற்றங்களே நெதெர்டோன் நோய்க்குறித் தொகுப்புக்குக் காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது, இந்நோய் பிறவி செந்தோல் நோய் ஆகும். இந்த நோயாளிகள் கிட்டத்தட்ட பெரும்பாலும் அட்டோபிக் வியாதியை அடைவர், அதனுடன் சேர்ந்து சளிக்காய்ச்சல், உணவு ஒவ்வாமை, தடிப்புச்சொறி மற்றும் ஆஸ்த்துமாவையும் கொண்டிருப்பர். இது போன்ற ஆதாரங்கள், ஒவ்வாமைப் பொருள்களால் தோல் சேதமடைதலுக்கு அரிக்கும் தோலழற்சி காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை ஆதரிக்கின்றன, மேலும் தொடர்ந்த சிகிச்சைக்கு வழியளிக்கின்றன.[61]

மற்றொரு ஆய்வு, உள்ளார்ந்த அரிக்கும் தோலழற்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய சில குறைபாடுகளுக்குக் காரணமாக இருக்க சாத்தியமுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்பும் ஒரு மரபணுவைக் கண்டறிந்தது. இந்த மரபணுவானது புரத ஃபிலேக்ரினை உற்பத்தி செய்கிறது, இது குறைவாக இருப்பதால் தோல் வறட்சி மற்றும் பலவீனமான தோல் தடுப்புத் திறன் ஆகியவை ஏற்படலாம்.[62]

இரத்தத்திலுள்ள இரண்டு குறிப்பிட்ட வேதிப்பொருள்களுக்கு அரிக்கும் தோலழற்சியின் போது ஏற்படும் நமைச்சல் உணர்வுடன் தொடர்புள்ளவையாக இருப்பதை ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. அவை மூளையில் உற்பத்தியாகும் நரம்பியல் காரணி (BDNF) மற்றும் பொருள் P ஆகியவை ஆகும்.[63]

2001 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்நோய் நிலை நிலவியதற்கான அறுதியிடல் 42% அதிகரித்தது, அப்போது இந்நோய் 5.7 மில்லியன் பெரியவர்களையும் சிறாரையும் தாக்கும் என மதிப்பிடப்பட்டது. அரிக்கும் தோலழற்சியானது பிற ஒவ்வாமை நிலைகளுக்கு தூண்டுக் காரணியாக இருக்கக்கூடும் என ஜர்னல் ஆஃப் ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசினின் ஒரு வெளியீடு கூறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் 9 மில்லியனுக்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பயன்படுத்தி, எத்தனை பேர் தோல் வியாதிகளைக் கொண்டுள்ளனர் என மதிப்பிட்டதாக GP பதிவுகள் காண்பிக்கின்றன.[64]

Remove ads

உயிர் அம்மைத் தடுப்பு வைரஸ்களுக்கு உட்படும் தன்மை

2007 ஆம் ஆண்டு ஜூனில், உயிர் அம்மைத் தடுப்பு வைரஸைக் கொண்டுள்ள பெரியம்மை தடுப்பு பெற்ற ஓர் அமெரிக்கப் படை வீரரிடமிருந்து அவரது இரண்டு வயது குழந்தைக்கு அந்த வைரஸ் பரவியதாக சயின்ஸ் பத்திரிகை கூறியது.[65] அந்த படைவீரருக்கும் அவரது மகனுக்கும் அரிக்கும் தோலழற்சியின் வரலாறு இருந்தது. அவரது மகனுக்கு அரிதான பக்கவிளைவு ஏற்பட்டது, அது அரிக்கும் தோலழற்சி வேக்ஸினேட்டம் எனப்பட்டது, அது குழந்தைகளுக்கு அவ்வப்போது பெரியம்மைக்கு எதிராக அம்மைத் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட 1960களின் போது காணப்பட்டது. அந்தக் குழந்தைக்கு உடல் முழுவதும் வடு போன்ற தடிப்புகள் ஏற்பட்டன, அவனது வயிற்றுப் பகுதியில் ஒரு திரவம் நிரம்பிக் காணப்பட்டது, அவனது சிறுநீரகங்கள் கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டிருந்தன. செண்டர் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷனின் நிபுணர்களுடனான செறிந்த கலந்தாலோசனையும் SIGA டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பரிசோதனைக்குட்பட்டிருந்த வைரஸ் எதிர்ப்பு மருந்து ஒன்றின் நன்கொடையாலுமே அந்தக் குழந்தையின் உயிர் காக்கப்பட்டது. அரிக்கும் தோலழற்சி குடும்ப வரலாறு கொண்டிருக்கும் நபர்கள் பெரியம்மைத் தடுப்பு மருந்து அல்லது உயிர் அம்மைத் தடுப்பு வைரஸைக் கொண்டிருக்கும் எந்த வகை தடுப்பு மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாதென அறிவுறுத்தப்பட்டது.[66]

Remove ads

குறிப்புதவிகள்

Remove ads

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads