அமெரிக்க இயற்பியல் வேதியியலாளர் From Wikipedia, the free encyclopedia
அரால்டு கிளேட்டன் இயூரீ (Harold Clayton Urey) வேந்தியல் குமுகப் பேராளர்[1] (ஏப்பிரல் 29, 1893 – சனவரி 5, 1981) ஓர் அமெரிக்க இயற்பியல் வேதியியல் அறிவியலாளர். இவர் ஐதரசனின் ஓரிடத்தானாகிய தியூட்டிரியம் கண்டுபிடித்ததற்காக 1934 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றுப் புகழ் ஈட்டியவர். அணுகுண்டு உருவாக்கத்திற்கும், உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாகுவதைச் செய்து காட்டிய மில்லர்-உரே செயல்முறைக்கும் புகழ் பெற்றவர்[2]
அரால்டு கிளேட்டன் இயூரீ Harold Clayton Urey | |
---|---|
அரால்டு உரே ~ 1963 | |
பிறப்பு | வாக்கர்ட்டன், இண்டியானா, அமெரிக்கா | ஏப்ரல் 29, 1893
இறப்பு | சனவரி 5, 1981 87) இலா ஃகொய்யா (La Jolla), கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | இயற்பியல் வேதியியல் |
பணியிடங்கள் | கோபனாகன் பல்கலைக்கழகம் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் அணுக்கருவியல் ஆய்வுகள் கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழம், சான் தியேகோ |
கல்வி கற்ற இடங்கள் | மோண்டானா பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கிலி |
ஆய்வு நெறியாளர் | கில்பெர்ட்டு என். இலூயிசு |
முனைவர் பட்ட மாணவர்கள் | இசுட்டான்லி மில்லர் |
அறியப்படுவது | தியூட்டிரியம் கண்டுபிடிப்பு மில்லர்-இயூரீ செய்முறைக்காட்டு இயூரீ-பிராடிலி விசைப்புலம் |
விருதுகள் | நோபல் பரிசு (வேதியியல்)(1934) பிராங்கிளின் பதக்கம் (1943) வேந்தியல் குமுகப் பேராளர்[1] |
கையொப்பம் |
இயூரீ அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் இயூரீ என்பாருக்கும் கோரா இரெபெக்கா இரைநோல் (Cora Rebecca Reinoehl) என்பாருக்கும் மகனாகப் பிறந்தார். அமெரிக்காவில் மாண்டானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கில்பெர்ட்டு இலூயிசு என்பாரின் நெறிகாட்டலில் வேதியியலில் வெப்பவியக்கவியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.
பெர்க்கிலியில் இயற்பியலாளர் இரேமண்டு டி. பிர்கெ அவர்களால் அறிவுத்தாக்கம் பெற்று பின்னர் கோப்பனாகனில் நீல்சு போருடன் சேர்ந்து அணுக்கட்டுமானம் பற்றி ஆய்வு செய்தார். அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் சான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் 1924 முதல் 1928 வரை வேதியியல் துணையாளராக ( 'Associate in Chemistry' ) இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு ஆய்வுக்குழுவை உருவாக்கினார். பின்னர் ஆர்தர் உருவார்க்கு (Arthur Ruark) என்பாருடன் சேர்ந்து "அணுக்கள், குவாண்டாக்கள், மூலக்கூறுகள்" (Atoms, Quanta and Molecules) என்னும் தலைப்பில் ஒரு நூல் எழுதினார். இது ஆங்கிலத்தில் உருவான குவாண்டம் இயங்கியல் பற்றியும் அதன் பயன்பாடுகளும் பற்றியுமான முதல் நூல்களில் ஒன்று. இயூரீயுக்கு அணுக்கருவியலில் ஆர்வம் ஏற்பட்டு அதில் ஆய்வு செய்ததின் விளைவாய் தியூட்டிரியம் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.