Remove ads
From Wikipedia, the free encyclopedia
அமேசான் கிண்டில் என்பது அமேசான் நிறுவனம் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு மின்படிப்பான் ஆகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது[1].
|
கிண்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் அகரவரிசை, வடிவங்களைக் காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.
அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்த ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கிண்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது[2][3]. மின் மை (E Ink) என்ற வகையிலான திரையை இந்தக் கிண்டில் கருவி கொண்டிருப்பதால், தாளில் படிக்கும் கண்களை உறுத்தாத அனுபவம் கிடைக்கிறது.
2004 ஆம் ஆண்டில் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலரான ஜெப் பெசோஸ்தன்னுடைய ஊழியர்களிடம் ஒரு பணியைக் கொடுத்தார். அது உலகிலேயே ஒரு சிறந்த மின்னூல் படிப்பானை நமது போட்டி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன் நாம் உருவாக்க வேண்டும் என்பதாகும். அமேசான் இதற்கு இட்ட குறிப்பெயர் ஃபியோனா ஆகும்.[4]
தெ கிண்டில் என்ற பெயரானது நிறுவனத்தின் ஆலோசகர்களான மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆய்வுக்கூடம் 126 (லேப் 126) தங்களின் கருவிக்கு ஒரு பொருத்தமான பெயரை வைக்குமாறு மைக்கேல் பேட்ரிக் க்ரோனன் மற்றும் கரின் ஹிப்மா போன்றவர்களிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்கள் இதற்கு கிண்டில் எனப் பெயரிட்டனர். அதற்கு வெளிச்சத்தை உருவாக்குவது என்பது பொருளாகும்.[5] அறிவார்ந்த மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது என்ற பொருள் தரக்கூடிய உவமையாக இந்தப் பெயர் பொருத்தமானதாக இருந்ததாக அவர்கள் நினைத்தனர்.[6]
2007 ஆம் ஆண்டில் கிண்டில் வன்பொருளுடன் கிண்டில் கருவி வெளியானது. பின் 2009 இல் சற்றுப் பெரிய திரையுடன் கிண்டில் டிஎக்சு வெளியானது. பலவிதமான கிண்டில் கருவிகள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று விசைப்பலகையுடனும் மற்றொன்று தொடுதிரையோடு வெளியிடப்பட்டது. மேலும் கிண்டில் மென்பொருளுடன் கூடிய கைக் கணினி கிண்டில் தீ என்ற பெயரிலும், விலை குறைவான தொடுதிரை கொண்ட கிண்டில் 7என்ற கருவியும் வெளிவந்தது. கிண்டில் மின்னனு படிப்பான் என்பது வாசித்தலுக்கு மட்டும் என்ற ஒரே நோக்கோடு தான் வெளிடயிப்பட்டது. ஏனெனில் வேறு சில வசதிகள் அதில் இருந்தால் வாசிப்பதில் இருந்து கவனச் சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அது தவிர்க்கப்படுகிறது.
அமேசான் நிறுவனம், பல்வேறு தளங்களிலும் மற்றும் கருவிகளிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோசு, மாக் இயக்குதளம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளம், விண்டோசு செல்லிடத் தொலைபேசி போன்றவற்றில் செயல்படும் வகையில் கிண்டிலை உருவாக்கியுள்ளது.[7] மேலும் அமேசான் மேகக் கணிமை பயனர் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் நவீன உலாவிகளின் மூலம் மின்னனு நூல்களைப் படிக்க முடியும்.[8]
அமேசான் தனது முதல் மின்னனுப் படிப்பானை நவம்பர் 19,2007 இல் 399 அமெரிக்க டாலர் மதிப்பில் வெளியிட்டது.[9] விற்பனை துவங்கிய ஐந்தரை மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.[10] பின் ஐந்து மாதங்கள் வரையில் இருப்பில் இல்லை என்ற செய்தியே 2008 ஏப்ரல் இறுதி வரை நீடித்தது.[11]
பெப்ரவரி 10, 2009 இல் அமேசான் தனது இரண்டாம் தலைமுறை கிண்டிலான கிண்டில் 2 என்பதை அறிவித்தது[12]. ஆனால் அது பெப்ரவரி 23, 2009 இல் விற்பனைக்கு வந்தது. உரையை ஒலியாக மாற்றக்கூடிய வசதியுடன் வந்தது. மேலும் இதில் 2 கிகாபைட்டு அளவிற்கு உள்ளக நினைவிடம் இருந்தது. அதில் 1.4 ஜிகாபைட்டு அளவிற்கு பயனர்கள் பயன்பாட்டிற்கு இருந்தது. முதல்தலைமுறை கிண்டிலின் எதிர்மறை தாக்கத்தால் கிண்டில் 2 இல் நினைவக அட்டைக்கான இடமின்றி கிண்டில்2 வந்தது. இது முதல் தலைமுறை கிண்டிலை விட மிகவும் மெல்லியதாக இருந்தது.[13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.