இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சையதா அன்வரா தைமூர் ( 1936 ஆம் ஆண்டு நவம்பர் 24 - 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 1981 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை இந்திய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்தார். [1] இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஆஸ்திரேலியாவில் இறந்தார் [2]
அன்வரா தைமூர் | |
---|---|
8 வது அஸ்ஸாம் முதலமைச்சர் | |
பதவியில் 6 டிசம்பர் 1980 – 30 ஜூன் 1981 | |
முன்னையவர் | குடியரசு ஆட்சி |
பின்னவர் | குடியரசு ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அஸ்ஸாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா, அஸ்ஸாம் மாநிலம் (தற்போது) | 24 நவம்பர் 1936
இறப்பு | 28 செப்டம்பர் 2020 83) ஆஸ்திரேலியா | (அகவை
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ், பிறகுஅகில இந்திய ஜனநாயக முன்னணி |
முன்னாள் கல்லூரி | அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் |
அன்வாரா 1956 ஆம் ஆண்டில் ஜோர்ஹாட்டின் டெபிச்சரன் பாருவா பெண்கள் கல்லூரியில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1972, 1978, 1983 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் அஸ்ஸாம் சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராக ( எம்.எல்.ஏ ) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ( மாநிலங்களவ ) பரிந்துரைக்கப்பட்டார். [3] 1991 ஆம் ஆண்டில் இவர் அஸ்ஸாமின் விவசாயத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் அஸ்ஸாமின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார்.
அஸ்ஸாம் வரலாற்றில் முதலமைச்சராகிய முதல் பெண் மற்றும் ஒரே முஸ்லிம் இவர் தான். இந்திய வரலாற்றிலும் எந்தவொரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஒரே முஸ்லிம் பெண் முதலமைச்சர் இவர் தான். [4] இவரது ஆட்சிக் காலம் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1981 ஆம் ஆண்டு ஜூன் வரையிலானது. இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியினால் இவரது அரசு ஆறு மாதங்களில் முடிவடைந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை காலகட்டத்தில் இவர் அஸ்ஸாம் மாநிலத்தின் பொதுபணி துறை அமைச்சராக இருந்தார்.
இவர் 2011 ஆம் ஆண்டில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்தார்.
இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். [5] [6]
2019 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி) இறுதி வரைவில் இவரின் பெயர் சேர்க்கப்படவில்லை.
ஆண்டு | விளக்கம் |
---|---|
1972-1978 | 5 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
|
1978-1983 | 6 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
|
1983-1985 | 7 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
|
1988-1990 | மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டார் |
1991-1996 | 9 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
|
2004-2010 | மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
|
இந்தியாவில் பட்டியல் பழங்குடியினரின் கலைக்களஞ்சியம்: பி.கே. மொஹந்தி எழுதிய ஐந்து தொகுதியில் பக்கம் 124.
இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஆஸ்திரேலியாவில் காலமானார். [7] [8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.