2020 தமிழ் தொலைக்காட்சி தொடர் From Wikipedia, the free encyclopedia
அன்பே வா என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்க, விராட் மற்றும் டெல்னா டேவிஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1]
இந்த தொடர் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் 28 ஏப்ரல் 2024 வரை திங்கள் முதல் சனி வரை இரவு நேரங்களில் ஒளிபரப்பாகி, 1102 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
அன்னலட்சுமியின் மூன்று மகள்களான பூமிகா, கார்த்திகா, தீபிகா. அப்பா இல்லாமல் வளரும் பிள்ளைகள். பொறுப்போடு குடும்பத்தை சுமக்கிறார் பூமிகா. கதாநாயகனான வருண் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் மற்றும் கலகலப்பானவன். தந்தையின் வட் புறுத்தலின் காரணமாக வேலைக்கு வரும் வருண், தொழில் காரணமாக பூமிகா ஊருக்கு வருகின்றான். பூமிகாவிற்கும், வருணுக்கும் இடையே அறிமுகமாகி இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.
அதற்கு பிறகு, பார்வதியும் வந்தனாவும் பூமிகாவை வருணிடமிருந்து பிரிக்க சதித்திட்டம் தீட்டினர். ஆனால், வருண் ஒவ்வொரு முறையும் பூமிகாவுக்கு நடக்கும் அநீதியை தடுத்து, அவளை காப்பாற்றினான்.
ஒருசமயம் ராம் சீதா இல்லத்தில் பிரம்மநந்தம்-கோமதி ஆகிய இரண்டு பேர் ராம் சீதா குடும்பத்தை தொந்தரவு செய்தனர். இதை அறிந்த வருணும் பூமிகாவும் ராகுல்-பேபி ஆகியவர்களை அனுப்பி ராம் சீதா குடும்பத்தை காப்பாற்றினர்.
இந்த தொடரில் கதாநாயகியாக குரங்கு பொம்மை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை டெல்னா டேவிஸ் என்பவர் 'பூமிகா' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகிறார்.[2], ஆனால் நவம்பர் 2023 ஆம் ஆண்டு அன்று இந்த தொடரிலில் இருந்து விலகினார். இவரது கதை இறந்ததாக மாற்றப்பட்டது.[3] இவருக்கு ஜோடியாக பேரழகி தொடரில் நடித்த விராட் என்பவர் 'வருண்' என்ற கதாபாத்திரத்திலும், இவரின் தாய் கதாபாத்திரத்தில் 'கன்யா பாரதி' என்பவரும் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் 'ஆனந்த்' என்பவரும் நடிக்கிறார்கள்.
பிரபல நடிகை வினயா பிரசாத் என்பவர் பூமிகாவின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் தமிழில் ரோஜா தொடருக்கு பிறகு நடிக்கும் இரண்டாவது தொடர் ஆகும். இவர்களுடன் கௌசல்யா செந்தாமரை, ராதாரவி, பிர்லா பாஸ், ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.