இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி From Wikipedia, the free encyclopedia
அன்னா மாணி (Anna Mani) (23 ஆகத்து 1918 – 16 ஆகத்து 2001) ஓர் இந்திய இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் துணை இயக்குநராக பணி புரிந்தார். இவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். இவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளை வெளியிட்டார்.[2]
அன்னா மாணி | |
---|---|
அன்னா மாணி | |
பிறப்பு | திருவிதாங்கூர், கேரளம் | 23 ஆகத்து 1918
இறப்பு | 16 ஆகத்து 2001 82) திருவனந்தபுரம், கேரளம் | (அகவை
தேசியம் | இந்தியா |
துறை | வானிலையியல், இயற்பியல் |
பணியிடங்கள் | இந்திய வானிலை ஆராய்ச்சி துறை, புனே |
அன்னா மாணி பீருமேடு, திருவாங்கூரில் பிறந்தார்.[3] இவரது தந்தை ஒரு குடிசார் பொறியாளர். இவரது குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் இவர் ஏழாவது குழந்தை. இவரது குழந்தைப் பருவத்தில் பெருவேட்கையுடைய வாசகராக இருந்தார். இவர் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது காந்தியின் நடவடிக்கைகள் மூலம் ஈர்க்கப்பட்டார். தேசிய இயக்கதின்பால் ஈர்க்கப்பட்டு, இவர் கதர் ஆடைகள் மட்டுமே அணிய முடிவு எடுத்தார். மருத்துவம் பயில வேண்டும் என்று ஆர்வம் கொண்ட போதிலும், இயற்பியல் மீது கொண்ட பற்றால் இயற்பியல் கற்க முற்பட்டார். 1939 இல், இவர் இயற்பியல் மற்றும் வேதியியலில் மாநிலக் கல்லூரி, சென்னையில் இருந்து இளநிலை அறிவியல் கௌரவ பட்டம் பெற்றார்.[3]
மாநிலக் கல்லூரி, சென்னையில் படிப்பை முடித்த பிறகு, இவர் பேராசிரியர் ச. வெ. இராமன் கீழ், மாணிக்கம் மற்றும் வைர ஒளியியல் பண்புகள் ஆராய்ச்சியில் வேலை செய்தார். இவர் ஐந்து ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதிய போதிலும், இயற்பியலில் முதுகலை பட்டம் இல்லை என்பதால், முனைவர் பட்டம் இவருக்கு மறுக்கப்பட்டது. இவர் இயற்பியல் படிப்பைத் தொடர பிரிட்டன் சென்றார் என்றாலும், இவர் இம்பீரியல் காலேஜ் இலண்டனில் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் படிப்பை தேர்ந்தேடுத்தார்.[3] 1948இல் இந்தியா திரும்பிய பிறகு, இவர் புனேவில் உள்ள வானிலை ஆராய்ச்சி துறையில் சேர்ந்தார். இவர் வளிமண்டலவியல் கருவியாக்கம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டார். இவர் 1976 ஆம் ஆண்டில் இந்திய வானிலை ஆராய்ச்சி துறை துணை இயக்குநராக ஓய்வு பெற்றார். இவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவை - 1980இல் 'The Handbook for Solar Radiation data for India மற்றும் 1981இல். Solar Radiation over India. [2] இவர் 1987இல் கே. ஆர். ராமநாதன் பதக்கம் வென்றார்.[3]
1994இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, 16 ஆகத்து 2001இல் திருவனந்தபுரத்தில் காலமானார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.