அனோபிலிஸ்
பூச்சிப் பேரினம் From Wikipedia, the free encyclopedia
பூச்சிப் பேரினம் From Wikipedia, the free encyclopedia
அனோபிலிசு (Anopheles) என்பது கொசுவின் ஒரு பேரினமாகும். இது 1818-ல் ஜே. டபிள்யூ. மெய்ஜென் என்பவரால் முதன் முதலில் விவரிக்கப்பட்டு பெயரிடப்பட்டது.[1] இதில் சுமார் 460 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பேரினத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. இவை மனிதருக்கு மலேரியாவை பரப்பக்கூடியன. இவற்றில் 30 முதல் 40 சிற்றினங்கள் மட்டுமே பொதுவாக பிளாஸ்மோடியம் பேரினத்தின் ஒட்டுண்ணிகளை பரப்புகின்றன. இது உள்ளூர் பகுதிகளில் மனிதர்களுக்கு மலேரியாவை ஏற்படுத்துகிறது. மிகவும் ஆபத்தான மலேரியா ஒட்டுண்ணி சிற்றினமான பிளாசுமோடியம் பால்சிபாரமை (மனிதர்களுக்கு) பரவுவதில் முக்கியப்பங்கு காரணமாக அனோபிலிசு காம்பியா மிகவும் அறியப்பட்ட சிற்றினமாகும்.
அனோபிலசு | |
---|---|
அனோபிலசு இசுடிபென்சி, பெண் கொசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | குலிசிடே |
பேரினம்: | அனோபிலிசு மெய்ஜென், 1818 |
சிற்றினங்கள் | |
For a full description, see section Systematics and the main article: Taxonomy of Anopheles
| |
அனோபிலசு |
இந்தப் பொதுப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான ἀνωφελής anōphelḗs 'பயனற்றது' என்பதிலிருந்து வந்தது. ἀν- an-, 'not', 'un-' மற்றும் ὄφελος óphelos 'profit' என்பதிலிருந்து பெறப்பட்டது. [2]
மற்ற பேரினக் கொசுக்கள் (ஏடீஸ், கியூலெக்சு, குலிசெட்டா, ஹேமகோகஸ், ஓக்லெரோடாடஸ்) நோய்க்காவி முகவர்களாக செயல்படலாம் என்றாலும் இவை மனிதருக்கு மலேரியாவை கடத்துபவை அல்ல.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.