அட்டப்பாடி தாலுகா
From Wikipedia, the free encyclopedia
அட்டப்பாடி தாலுகா (Attappady) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கான தாலுகா ஆகும்.[2] அட்டப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அகாலி ஊராட்சி ஆகும். மண்ணார்க்காடு வருவாய் வட்டத்திலிருந்து 2021-ஆம் ஆண்டில் பிரித்து, 735 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அட்டப்பாடி தாலுகா நிறுவப்பட்டது.[3][4]
அட்டப்பாடி தாலுகா | |
---|---|
![]() | |
![]() அட்டப்பாடி தாலுகாவில் பாயும் பவானி ஆறு | |
ஆள்கூறுகள்: 11°5′0″N 76°35′0″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | தாலுகா |
பரப்பளவு | |
• மொத்தம் | 734.62 km2 (283.64 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 64,318 |
• அடர்த்தி | 88/km2 (230/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம், ஆங்கிலம்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 678581 |
வாகனப் பதிவு | KL-50 |
அருகமைந்த நகரம் | பாலக்காடு, கோயம்புத்தூர் |
இணையதளம் | www |

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அட்டப்பாடி தாலுகா, 249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டது..[5] இவ்வட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உள்ளது. அட்டப்பாடி தாலுகாவில் குறும்பர், முதுவர், இருளர் போன்ற மலைவாழ் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர்.
அட்டப்பாடி தாலுகாவின் கிழக்கில் மலப்புரம் மாவட்டத்தின் நீலாம்பூர் பகுதியில் உள்ள காளியாறு சமவெளியும், மேற்கில் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ளது.
புவியியல்

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்ட் அட்டப்பாடி தாலுகா, கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் உள்ளது. அட்டப்பாடி தாலுகாவில் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா உள்ளது. மேலும் இங்கு பவானி ஆறு உற்பத்தியாகிறது. அட்டப்பாடி தாலுகாவின் கிழக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் எல்லையும், வடக்கில் நீலகிரி மாவட்டத்தின் எல்லையும், தெற்கில் பாலக்காடு தாலுகாவும், மேற்கில் மண்ணார்க்காடு தாலுகாவும், ஏறநாடு தாலுகாவும் அமைந்துள்ளது.
தாலுகா நிர்வாகம்
அட்டப்பாடி பழங்குடிகள் தாலுகாவில் அகாலி, சோலையூர் மற்றும் புதூர் கிராம ஊராட்சிகள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 16,865 வீடுகள் கொண்ட அட்டப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின்[6] மக்கள் தொகை 64,318 ஆகும். அதில் ஆண்கள் 32,035 மற்றும் பெண்கள் 32,283 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,009 (10.9%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் குறும்பர், முதுவர், இருளர் போன்ற பழங்குடி மக்கள் 27,627 (43%)) உள்ளனர்.[7]மேலும் அட்டப்பாடி தாலுகாவில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.[8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.