From Wikipedia, the free encyclopedia
அங்க நாடு (Anga Kingdom) பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த நாடுகளில் ஒன்றாகும். அங்க நாடு தற்கால இந்தியாவின் கிழக்கில் உள்ள பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளையும் கொண்டிருந்தது.[1]
மகாபாரத காவியத்தில் அங்க நாட்டிற்கு கர்ணனை மன்னராக, துரியோதனன் பட்டம் சூட்டியதாக ஆதி பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்க நாட்டின் தலைநகராக சம்பாபுரி நகரம் விளங்கியது. மகத நாட்டு மன்னர் ஜராசந்தன் மாலினிபுரி எனும் நகரத்தை அங்க மன்னர் கர்ணனுக்குப் பரிசாக அளித்தான்.
அங்க நாட்டு மன்னன் கர்ணன், குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக போரிட்டார். குருச்சேத்திரப் போரின் 16 மற்றும் 17வது நாள் போரின் போது, கௌவரப் படைகளுக்கு தலைமை ஏற்றார். போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர் கர்ணனின் மகன் இந்திரப்பிரஸ்தம் நாட்டிற்கு மன்னராக, பாண்டவர்களால் முடிசூட்டப்பட்டான்.
Seamless Wikipedia browsing. On steroids.