From Wikipedia, the free encyclopedia
அகப்பா என்பது மலைமீது இருந்த ஓர் ஊர். அதனைச் சுற்றி அகழி இருந்தது. கோட்டை வாயிலுக்குத் தொங்கும் கதவு இருந்தது. அந்தக் கதவைத் தாழ்ப்பாள் போட அமைத்திருந்த ஐயவி என்னும் குறுக்கு மரத்தைத் தூக்க வில்விசை வைக்கப்பட்டிருந்தது. பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொங்குநாட்டை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்த பின்னர் இந்தக் கோட்டையைத் தாக்கி வென்றான்.[1] குட்டுவன் ஆண்ட இந்த அகப்பா நகரைத் தாக்கிச் செம்பியன் பகலிலேயே அதனைத் தீயிட்டுக் கொளுத்தினான்.[2]
இந்தச் செய்திகளைத் தொகுத்து எண்ணிப் பார்க்கும்மோது தூங்கெயில் கதவம் காவல் கொண்ட வண்டனும், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனும் நினைவுக்கு வருகின்றனர்.
அகப்பாக் கோட்டை அரசன் வண்டன். இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் வென்று தனதாக்கிக்கொண்டான். பின்னர் இந்தக் குட்டுவனைத் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் வென்று அகப்பாக் கோட்டையை வென்று ஊரைத் தீக்கு இரையாக்கினான் என்னும் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தூங்கெயில்
தூங்கெயில் கதவம்
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்
Seamless Wikipedia browsing. On steroids.