ஃபத்தா (Fatah அல்லது Fateh, அரபு மொழி: فتح ஃபத்ஹ்)[2] என்பது பாலத்தீனத்தின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இது பல-கட்சிகளைக் கொண்ட பாலத்தீன விடுதலை இயக்கக் கூட்டமைப்பின் மிகப் பெரும் பிரிவாகும்.

விரைவான உண்மைகள் ஃபத்தா Fatah, தலைவர் ...
ஃபத்தா
Fatah
தலைவர்மகுமுது அப்பாஸ்
நிறுவனர்யாசிர் அரஃபாத்
குறிக்கோளுரை"Ya Jabal Mayhezak Reeh"
("காற்று மலையை அசைக்க முடியாது")
தொடக்கம்1959 இல் அரசியல் இயக்கமாக
1965 இல் அரசியல் கட்சியாக[1]
தலைமையகம்ரம்லா, மேற்குக் கரை
இளைஞர் அமைப்புஃபத்தா இளையோர்
கொள்கை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
சட்டப் பேரவை
45 / 132
இணையதளம்
www.fateh.ps
மூடு

ஃபத்தா அமைப்பு ஆரம்ப காலங்களில் பொதுவாக புரட்சி அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளதுடன் பல போராளிக் குழுக்களைக் கொண்டிருந்தது.[3][4][5][6][7]

2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஃபத்தா கட்சி நாடாளுமன்றத்தில் ஹமாஸ் கட்சியிடம் பெரும்பான்மையை இழந்தது. அனைத்து அமைச்சரவைப் பொறுப்புகளில் இருந்தும் விலகிய ஃபத்தா முக்கிய எதிர்க்கட்சியாகப் பின்னர் செயல்படவில்லை. ஹமாஸ் இயக்கத்தின் வெற்றி இரு பெரும் பாலத்தீனக் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்தியது. எனினும் மேற்குக் கரையின் நிருவாகத்தை ஃபத்தா தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

2014 ஏப்ரல் 23 அன்று இரண்டு கட்சிகளும் காசாவில் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, இரு போட்டிக் குழுக்களும் நல்லிணக்க உடன்படிக்கை ஒன்றை அறிவித்தன. இந்த உடன்படிக்கையின்படி, 5 வாரங்களுக்குள் ஒரு ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அதன் பின்னர் 6 மாதங்களில் பொதுத்தேர்தலும், அரசுத்தலைவர் தேர்தலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.