ஐ. எசு. ஓ.3166-2
From Wikipedia, the free encyclopedia
ஐ. எசு. ஓ.3166-2என்பது ஐ.எசு.ஓ 3166இன் ஓர் அங்கமாகும். ஐ. எசு. ஓ. 3166-1 இல் குறியிடப்பட்டுள்ள உலகின் அனைத்து நாடுகளின் பிரதான உட்கோட்டங்களை (மாநிலங்கள்,ஆட்சிப்பகுதிகள்) அடையாளப் படுத்த பயன்படுத்தப்படும் சுருக்கக் குறிகளை பட்டியலிடும் சர்வதேச சீர்தர மொழிக் குறியீடுகளின் தொகுதியாகும். இதன் அலுவல்முறையான தலைப்பு:நாடுகளின் மற்றும் அவற்றின் உட்கோட்டங்களின் பெயர்களை அடையாளப்படுத்தும் சுருக்கக் குறிகள்;பகுதி 2:நாட்டு உட்கோட்டங்கள் குறிகள்.இவை 1998ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டன.
ஐ.எசு.ஓ 3166-2 வின் நோக்கம் அனைத்து நாடுகளின் நிர்வாக கோட்டங்களையும் சுருக்கமான மற்றும் தனித்துவமான எண்ணெழுத்துகளால் உலக சீர்தரமாக குறிக்கப்பட்டு முழு பெயரையும் பல குழப்பங்களுடன் குறிப்பதை தவிர்ப்பதே யாகும். ஒவ்வொரு ஐ.எசு.ஓ 3166-2 குறியும் கிடைக்கோடு பிரிக்க இரு பகுதிகளைக் கொண்டுள்ளன:
- முதல் பகுதி நாட்டின் ஐ. எசு. ஓ 3166-1 ஆல்பா-2 குறி
- இரண்டாம் பகுதி மூன்று எண்ணிக்கைக்குள் உள்ள எண் அல்லது எழுத்து கொண்ட குறித்தொடர்;இவை அந்நாட்டில் ஏற்கனவே பின்பற்றப்படும் குறியீடாக இருக்கலாம்,அல்லது அந்நாடு கொடுத்த தரவுகளாக இருக்கலாம் அல்லது ஐ.எசு.ஓ 3166 பராமரிப்பு குழுமம் வடிவமைத்தவையாக இருக்கலாம்.
இவ்வகையான முழுமையான ஐ.எசு.ஓ 3166-2 குறி ஒவ்வொன்றும் உலகின் எந்தவொரு நிலப்பகுதியையும் குழப்பம் எதுவும் இன்றி துல்லியமாக டையாளப்படுத்தும்.தற்போது 4200 குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.[1]
சில நாடுகளுக்கு, இரு நிலைகள் அல்லது மேலும் குறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பொதுவாக உயர்நிலை உட்கோட்டங்களுக்கு ஐ.எசு.ஓ.3166-1 ஆல்பா-2 குறிகள் இன்றி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால் தனியாக அவற்றினால் உலக அளவில் தனித்துவத்தை உறுதி செய்யவியலாது. இருப்பினும் ஆல்பா - 2 குறிகளுடன் அவை முழுமை பெறுகின்றன.[2]