மணிப்பூரின் 13வது சட்டமன்றத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia
2022 மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் (2022 Manipur Legislative Assembly elections) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மணிப்பூர் மாநில சட்டமன்றத்தின் 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டங்களாக 28 பிப்ரவரி 2022 மற்றும் 5 மார்ச் 2022 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிகை 10 மார்ச் 2022 அன்று நடைபெந்து.[1]மார்ச் 10, 2022 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
| ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
|
மணிப்பூர் தேர்தலுக்கான அட்டவணையினை இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்கண்டவாறு வடிவமைத்துள்ளது. இந்த தேர்தல் அட்டவணையானது சனவரி 8, 2022 அன்று வெளியிடப்பட்டது.[2]
வரிசை எண் | நிகழ்வுகள் | கட்டம் | |
---|---|---|---|
முதல் | இரண்டு | ||
1. | வேட்பு மனு தாக்கல் துவக்க நாள் | 1 பிப்ரவரி 2022 | 4 பிப்ரவரி 2022 |
2. | வேட்பு மனு தாக்கல் முடிவு நாள் | 8 பிப்ரவரி 2022 | 11 பிப்ரவரி 2022 |
3. | வேட்பு மனுக்கள் பரிசீலனை | 9 பிப்ரவரி 2022 | 14 பிப்ரவரி 2022 |
4. | வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் | 11 பிப்ரவரி 2022 | 16 பிபரவரி 2022 |
5. | தேர்தல் நாள் | 27 பிப்ரவரி 2022 | 3 மார்ச் 2022 |
6. | வாக்கு எண்ணிக்கை நாள் | 10 மார்ச் 2022 |
10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிககப்பட்டது. அதில் மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 7 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரசு 5 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், குக்கி மக்கள் கூட்டணி 2 தொகுதிகளிலும் மற்றும் சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.[3]
இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ந. பீரேன் சிங் இரண்டாவது முறையாக மணிப்பூர் முதலமைச்சராக 21 மார்ச் 2022 அன்று பதவியேற்றார். [4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.