2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2018 Commonwealth Games) 2018 ஏப்ரல் 4 முதல் 2018 ஏப்ரல் 15 வரை ஆத்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசெட்டெரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1][2] ஆத்திரேலியா பொதுநலவாய விளையாட்டுக்களை நடத்தியது இது ஐந்தாவது முறையாகும். முதற் தடவையாக ஒரு பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என சம அளவில் விளயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விரைவான உண்மைகள் XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games, நிகழ் நகரம் ...
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள் XXI Commonwealth Games | |
---|---|
2018 பொதுநலவாய விளையாட்டுகளின் சின்னம் | |
நிகழ் நகரம் | கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து |
குறிக்கோள் | கனவுகளை பகிருங்கள் |
பங்குபெறும் நாடுகள் | 71 பொதுநலவாய நாடுகள் |
நிகழ்வுகள் | 19 விளையாட்டுகளில் 275 |
துவக்கவிழா | 4 ஏப்ரல் 2018 |
இறுதி விழா | 15 ஏப்ரல் 2018 |
Officially opened by | சார்லசு, வேல்சு இளவரசர் |
Athlete's Oath | கரென் மர்பி |
Queen's Baton Final Runner | சலி பியர்சன் |
முதன்மை விளையாட்டரங்கம் | கராரா விளையாட்டரங்கம் |
இணையதளம் | GC2018.com |
மூடு