From Wikipedia, the free encyclopedia
சூன் 28, 2016 அன்று துருக்கியின் இசுதான்புல் நகரத்திலுள்ள அத்தாதுர்க் வானூர்தி நிலையத்தின் முனையம் இரண்டில் வெடிகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.[4] தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாகவும் 230 பேர் காயமுற்றதாகவும் துருக்கியப் பிரதமர் பினாலி யாகதிம் அறிவித்தார்.[2][5][6] வானூர்தி நிலையத்தின் தானுந்து நிறுத்தற் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும்[4] பன்னாட்டு வருகை முனையத்தின் வாயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததாகவும்[7] அறியப்படுகின்றது; இதனை தற்கொலைப் படையினர் நடத்தியதாகவும் கருதப்படுகின்றது.[2] வெடிகுண்டுகள் வானூர்தி நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தனவாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.[6] முனையத்தில் அல்லது அருகில் மூன்று தற்கொலைத் தாக்குவோர் குண்டுகளை வெடித்துள்ளனர்; நான்கு ஆயுதமேந்தியோர் குண்டு வெடித்தபின் ஓடியதாகவும் நேரடி சாட்சிகள் சிலவற்றை மேற்கோளிட்டு செய்திகள் வந்துள்ளன. இதனை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல் 90 விநாடிகளில் முடிந்து விட்டதாக ஓர் மூத்த ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அலுவலர் குறிப்பிட்டார்.[8]
2016 இசுதான்புல் வானூர்திநிலையத் தாக்குதல் | |
---|---|
தாக்குதல் நடைபெற்ற முனையம் 2. | |
இடம் | அத்தாதுர்க் வானூர்தி நிலையம், இசுதான்புல், துருக்கி |
நாள் | 28 சூன் 2016 ~22:00 PM (கிஐகோநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | அத்தாதுர்க் வானூர்தி நிலையத்தில் இருந்த குடிமக்களும் பாதுகாப்பு அலுவலரும் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடு, திரள் கொலை, பயங்கரவாதம் |
ஆயுதம் | கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் |
இறப்பு(கள்) | 41 (+ 3 தாக்கியோர்)[1][2] |
காயமடைந்தோர் | 239[2] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு[3] |
தாக்கியோரின் எண்ணிக்கை | 3 (அனைவரும் இறப்பு)[2] |
சவூதி அரேபியாவிலிருந்து ஐந்து பேரும், 23 துருக்கிய நாட்டினரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.