2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுகள் (2012 Summer Paralympic Games) பதினைந்தாவது இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் மாநகரில் ஆகத்து 29, 2012 முதல் செப்டம்பர் 9, 2012 வரை நடைபெற்றது.
XIV மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகள் | |||
---|---|---|---|
நடத்தும் நகரம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் | ||
பங்குபற்றும் அணிகள் | 164 | ||
பங்குபற்றும் வீரர்கள் | 4294 | ||
நிகழ்வுகள் | 21 விளையாட்டுக்களில் 503 | ||
துவக்க விழா | 29 ஆகத்து | ||
இறுதி விழா | 9 செப்டம்பர் | ||
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் அரங்கம் | இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கம் | ||
கோடைக்காலம்: | |||
| |||
குளிர்காலம்: | |||
|
2012இல் இலண்டன் மூன்றாம் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்துகின்ற போதும் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் இந்த விளையாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் முறையாக நடைபெறுகின்றன; 1984ஆம் ஆண்டின் கோடைக்கால இணை ஒலிம்பிக் ஐக்கிய இராச்சியத்தின் இசுடோக் மண்டெவில்லிலும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் கூட்டாக நடைபெற்றன.
1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் துவங்கப்பட்ட அதே நாளில் உடல் குறையுடையோருக்கான முதல் அமைப்புசார் விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை இசுடோக் மண்டெவில் மருத்துவமனையின் மருத்துவர் லுட்விக் கட்மான்[1] தண்டுவடத்தில் காயப்பட்ட பிரித்தானிய இரண்டாம் உலகப் போர் முன்னாள் வீரர்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த முதல் போட்டிகள் உலக சக்கர நாற்காலி மற்றும் உறுப்பிழந்தோர் விளையாட்டுக்கள் என அழைக்கப்பட்டன.[2]