சிறுகோள் From Wikipedia, the free encyclopedia
2004 எஃப்எச் (2004 FH) என்ற புவியருகு விண்பொருள், 15 மார்ச்சு 2004 ஆம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விண்பொருள் சுமார் 30 மீட்டர் விட்டம் உடையது. 18 மார்ச்சு 2004 ஆம் தேதி 22:08 ஒ. ச. நே, புவியின் மேற்பரப்பை 43,000 கிமீ (27,000 மைல்) தொலைவில் கடந்து சென்றது, 21 நவம்பர் 2008 அன்று புவிக்கு மிக அருகாமையில் கடந்து சென்றது அதனால் இது புவியை நெருங்கிய விண்பொருட்கள் பட்டியலில் 11 வது இடத்தைப் பெற்றது.
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | லிங்கன் புவியருகு சிறுகோள் ஆராய்ச்சி |
கண்டுபிடிப்பு நாள் | 15 மார்ச்சு 2004 |
பெயர்க்குறிப்பினை
| |
வேறு பெயர்கள் | இல்லை |
சிறு கோள் பகுப்பு |
அடென் குடும்பத்தை சேர்ந்த சிறுகோள், புவியை மிக அருகில் கடந்து சென்ற சிறுகோள் |
காலகட்டம்ஜூலை 14, 2004 (ஜூலியன் நாள் 2453200.5) | |
சூரிய சேய்மை நிலை | 1.054 வானியல் அலகு |
சூரிய அண்மை நிலை | 0.582 வானியல்_அலகு |
அரைப்பேரச்சு | 0.818 வானியல் அலகு |
மையத்தொலைத்தகவு | 0.288 |
சுற்றுப்பாதை வேகம் | 270.192 நாள் |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 32.237 கிமீ/நொடி |
சராசரி பிறழ்வு | 28.042° |
சாய்வு | 0.016 62° |
Longitude of ascending node | 264.432° |
Argument of perihelion | 62.952° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | 30 மீட்டர் விட்டம் [1] |
நிறை | 2.8×107 கிகி |
சுழற்சிக் காலம் | 0.05 மணி [2] (3 நிமிடங்கள், 1 வினாடி) |
வெப்பநிலை | ~308 கெ |
விண்மீன் ஒளிர்மை | 26.2 |
2004 எஃப்எச், அடென் குடும்பத்தை சேர்ந்த சிறுகோள் ஆகும்.இது புவியை மிக நெருங்கிய 4 வது சிறுகோள் (11வது விண்பொருள்) ஆகும். இந்த விண்பொருள் பூமியின் மீது மோதினால் நூற்றுக்கணக்கான கிலோடன் டிஎன்டி வெடிபொருள் வெடித்தாற் போல இருக்கும்.
17 மார்ச்சு 2044 ஆம் தேதி, 2004 எஃப்எச் புவியின் மேற்பரப்பை 1,740,000 கிமீ (1,080,000 மைல்) தொலைவில் கடந்து செல்லும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.