From Wikipedia, the free encyclopedia
ஹோமோசிஸ்டீன் (Homocysteine) என்னும் அமினோ அமிலத்தின் வாய்பாடு: HSCH2CH2CH(NH2)CO2H. இது, சிஸ்டீன் அமினோ அமிலத்திற்கு ஒப்பானதாகும். ஆனால், சிஸ்டீனைக் காட்டிலும் ஒரு மீத்தைலீன் (-CH2-) தொகுதியை அதிகமாகக் கொண்டுள்ளது. ஹோமோசிஸ்டீன், மெத்தியோனின் அமினோ அமிலத்திலுள்ள இறுதி மீத்தைல் [Cε] தொகுதியை நீக்குவதன் மூலம் தொகுக்கப்படுகிறது. மீண்டும், பி-விட்டமின்கள் (உயிர்சத்துக்கள்) துணையுடன் மறுசுழற்சி முறையில் மெத்தியோனின் அமிலமாகவோ, அல்லது சிஸ்டீனாகவோ மாற்றம் பெறக் கூடியது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-அமினோ-4-சல்ஃபானைல் பியூட்டநோயிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
454-29-5 [ESIS] 6027-13-0 (L-isomer) | |
ChEMBL | ChEMBL310604 |
ChemSpider | 757 |
EC number | 207-222-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C05330 |
பப்கெம் | 778 |
| |
பண்புகள் | |
C4H9NO2S | |
வாய்ப்பாட்டு எடை | 135.18 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரத்த ஓட்டத்தில் அதிக அளவு ஹோமோசிஸ்டீன் அளவுகள் இருப்பது இதயகுழலிய நோயுடன் (மாரடைப்பு) தொடர்புப் படுத்தப்பட்டாலும், இதன் அளவைக் குறைப்பதனால் நோய் அறிகுறிகளில் மாற்றம் தெரிவதில்லை.[1]
நடுநிலை அமிலக்காரக் குறியீட்டில் (pH=7.0) ஹோமோசிஸ்டீன் இருமுனை அயனிவடிவத்தில் உள்ளது. (S)-ஹோமோசிஸ்டீன் (இடது) மற்றும் (R)-ஹோமோசிஸ்டீனின் (வலது) பீட்டாடைன் வடிவம்:
ஹோமோசிஸ்டீனை உணவிலிருந்துப் பெற முடியாது.[2] மாறாக, மெத்தியோனின் அமினோ அமிலத்திலிருந்து பல்படிமுறையில் தொகுக்கப்படுகின்றது. L-ஹோமோசிஸ்டீன் முதன்மையாக இரண்டு இறுதி நிலைகளை அடைகிறது: டெட்டிராஹைட்ரோஃபோலியேட் மூலமாக மெத்தியோனினாக மாற்றப்படுதல் அல்லது சிஸ்டீனாக மாற்றப்படுதல்.[3]
பாலினம் | வயது | கீழ் எல்லை | மேல் எல்லை | அலகு | ஏற்றம் | சிகிச்சைக்குரிய இலக்கு |
பெண் | 12–19 ஆண்டுகள் | 3.3[4] | 7.2[4] | μmol/L | > 10.4 μmol/L (அ) > 140 μg/dl | < 6.3 μmol/L[5] (அ) < 85 μg/dL[5] |
45[6] | 100[6] | μg/dL | ||||
>60 ஆண்டுகள் | 4.9[4] | 11.6[4] | μmol/L | |||
66[6] | 160[6] | μg/dL | ||||
ஆண் | 12–19 ஆண்டுகள் | 4.3[4] | 9.9[4] | μmol/L | > 11.4 μmol/L (அ) > 150 μg/dL | |
60[6] | 130[6] | μg/dL | ||||
>60 ஆண்டுகள் | 5.9[4] | 15.3[4] | μmol/L | |||
80[6] | 210[6] | μg/dL | ||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.