ஹெலியோபோலிஸ்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
ஹெலியோபோலிஸ் (Heliopolis - City of the sun) பண்டைய எகிப்திய மொழியில் ஹெலியோபோலிஸ் என்பதற்கு சூரிய நகரம் எனப்பொருள்படும். பண்டைய எகிப்தின் கீழ் எகிப்து பிரதேசத்தில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தின் பதிமூன்றாம் வம்ச பார்வோன்களுக்கு தலைநகரமாக விளங்கியது. தற்போது இந்நகரம் கெய்ரோ புறநகருக்கு வடகிழக்கில் அயின் சாம்ஸ் எனுமிடத்தில் உள்ளது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஹெலியோபோலிஸ் I͗wnw அல்லது Iunu | |
---|---|
12-ஆம் வம்ச மன்னர் முதலாம் செனுஸ்ரெத் ஹெலியோபோலிஸ் நகரத்தில், இரா எனும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 69 அடி உயர கல்தூபி | |
இருப்பிடம் | எகிப்து |
பகுதி | கெய்ரோ ஆளுநகரம் |
ஆயத்தொலைகள் | 30.129333°N 31.307528°E / 30.129333; 31.307528 |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Lower_Egypt-en.png/640px-Lower_Egypt-en.png)
இந்நகரம் பண்டைய எகிப்தின் துவக்க கால அரசமரபினர்களுக்கு தலைநகராக விளங்கியது.[1] பழைய எகிப்து இராச்சியம் மற்றும் எகிப்தின் மத்திய கால இராச்சிய ஆட்சிக் காலங்களில் இந்நகரம் பெரிதாக விரிவாக்கப்பட்ட்து. பிற்காலத்தில் இதனருகில் புதிதாக கெய்ரோ நகரம் உருவானதால், ஹெலியோபோலிஸ் நகரத்தின் முக்கியத்துவம் குன்றியது. தற்போது இந்நகரத்தில் அழிபாடுகள் மட்டும் எஞ்சியுள்ளது.
12-ஆம் வம்ச பார்வோன் முதலாம் செனுஸ்ரெத் ஹெலியோபோலிஸ் நகரத்தில் நிறுவிய இரா எனும் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 69 அடி உயர கல்தூபி மட்டும் எஞ்சியுள்ளது.[2]