ஹிப்பார்க்கஸ்
2 ஆம் நூற்றாண்டின் கிரேக்க வானியலாளர், புவியியலாளர் மற்றும் கணிதவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஹிப்பார்க்கஸ் (Hipparchus, கி.பி.190– கி.பி. 120 ),கிரேக்க வானவியலாளர்,கணிதவியலாளர், புவியியலாளர் மற்றும் சோதிடவியலாளர் ஆவார். கோணவியலின் நிறுவனர் எனக் கருதப்படுபவர். கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே விண்மீன்களை வெறும் கண்களால் ஆராய்ந்து விண்மீன் பட்டியல் ஒன்றைத் தயாரித்தவர். அதனைக் கொண்டு விண்மீன் கோளம் ஒன்றைத் தயாரித்து அதில் அந்தப் பட்டியலில் உள்ள வின்மீன்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டார். இதனால் இவர் இக்கால கோளரங்கங்களின் முன்னோடி என அழைக்கப்பட்டார். தொலை நோக்கிகளோ, பிற கருவிகளோ இல்லாத காலத்தில் தனது கடும் உழைப்பால் வானவியல் துறைக்கு அடித்தளம் அமைத்து பல துறைகளிலும் அரிய கண்டுபிடிப்புகளையும் , கணக்கீடுகளையும் செய்த அறிஞர் ஹிப்பார்க்கஸ் ஆவார்.