![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/44/Hajipur_Picture_September_2015.jpg/640px-Hajipur_Picture_September_2015.jpg&w=640&q=50)
ஹாஜிப்பூர்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
ஹாஜீப்பூர் என்னும் நகரம், இந்திய மாநிலமாகிய பீகாரில் உள்ளது. இது வைசாலி மாவட்டத்தின் தலைமையகமாகச் செயல்படுகின்றது. இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் பட்னா உள்ளது. பட்னாவினையும் ஹாஜீப்பூரையும் இணைத்து கிரேட்டர் பட்னா அமைக்கும் திட்டமும் உள்ளது. உலகின் நீளமான பாலங்களில் ஒன்றான மகாத்மா காந்தி பாலம் இங்குள்ளது, இது பட்னாவினையும் ஹாஜிப்பூரையும் இணைக்கிறது. இந்த நகரம் வாழைப்பழ உற்பத்திக்கு புகழ்பெற்றது. மத்திய கிழக்கு இரயில்வே தலைமை அலுவலகம் இங்குள்ளது.
விரைவான உண்மைகள் ஹாஜிப்பூர் हाजीपुर, நாடு ...
ஹாஜிப்பூர்
हाजीपुर | |
---|---|
நகரம் | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | வைசாலி |
ஏற்றம் | 46 m (151 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,47,688 |
மொழிகள் | |
• பேச்சு மொழிகள் | இந்தி, பஜ்ஜிகா, போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 844 101, 844 102 |
தொலைபேசிக் குறியீடு | 91- 6224- XX XX XX |
வாகனப் பதிவு | BR-31 |
பால் விகிதம் | 1.0892 ♂/♀ |
மக்களவைத் தொகுதி | ஹாஜீப்பூர் |
சட்டமன்றத் தொகுதி | ஹாஜீபூர் |
திட்டமிடும் அதிகார மையம் | பாட்னா வட்டார வளர்ச்சிக் குழுமம் |
ஆட்சி அமைப்பு | ஹாஜீபூர் நகராட்சி |
இணையதளம் | vaishali |
மூடு