![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/%25D8%25AA%25D8%25A7%25D8%25A8%25D9%2584%25D9%2588_%25D8%25AD%25D8%25A7%25D9%2581%25D8%25B8_%25D8%25AF%25D8%25B1_%25D8%25A7%25D9%2586%25D8%25AC%25D9%2585%25D9%2586_%25D8%25A2%25D8%25AB%25D8%25A7%25D8%25B1_%25D9%2588_%25D9%2585%25D9%2581%25D8%25A7%25D8%25AE%25D8%25B1_%25D9%2581%25D8%25B1%25D9%2587%25D9%2586%25DA%25AF%25DB%258C.jpg/640px-%25D8%25AA%25D8%25A7%25D8%25A8%25D9%2584%25D9%2588_%25D8%25AD%25D8%25A7%25D9%2581%25D8%25B8_%25D8%25AF%25D8%25B1_%25D8%25A7%25D9%2586%25D8%25AC%25D9%2585%25D9%2586_%25D8%25A2%25D8%25AB%25D8%25A7%25D8%25B1_%25D9%2588_%25D9%2585%25D9%2581%25D8%25A7%25D8%25AE%25D8%25B1_%25D9%2581%25D8%25B1%25D9%2587%25D9%2586%25DA%25AF%25DB%258C.jpg&w=640&q=50)
ஹாஃபீசு
From Wikipedia, the free encyclopedia
ஹாஃபீசு என்னும் புனை பெயரால் பரவலாக அறியப்படும் கவாசா சம்சுத்தீன் முகம்மத் ஹாஃபீசு சீராசீ (1345 - 1390) என்பவர், பாரசீகத்தின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்றும் குறிப்பிடுவது உண்டு. பல ஈரானியர் இல்லங்களில் இவரது பாடல்களை மனப்பாடம் செய்வதும், இவரது வரிகளைப் பழமொழிகளாகப் பயன்படுத்துவதும் இன்றும் கூட நிகழ்ந்து வருகின்றது. இவரது வாழ்க்கையையும், பாடல்களையும் பெருமளவிலானோர் ஆய்வு செய்துள்ளதுடன், இவற்றுக்குப் பல விளக்கங்களும், விரிவுரைகளும் எழுதியுள்ளனர். இவரது படைப்புக்கள் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய பாரசீகப் பாடல்களில் மற்றெவரினது பாடல்களைக் காட்டிலும் கூடிய செல்வாக்குச் செலுத்தின.
ஹாஃபீசு | |
---|---|
![]() | |
பிறப்பு | ஹாஃபீசு சீராசீ c. கிபி 1310/1337 சீராசு |
இறப்பு | 1390 சீராசு |
தொழில் | கவிஞர் |
தேசியம் | பாரசீகர் |
காலம் | முசாபரியர் |
வகை | பாரசீகக் கவிதை, Persian Mysticism, இர்பான் |
இலக்கிய இயக்கம் | கவிதை, Mysticism, சூபியம், மீவியற்பியல், நெறிமுறைகள் |
காதல், மதுவைப் புகழ்தல் என்பவற்றோடு தங்களை அறத்தின் காவலர்களாகவும், நீதிமான்களாகவும், எடுத்துக்காட்டுகளாகவும் பிறரை நம்பச்செய்து பாசாங்கு செய்பவர்களுடைய நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் இவரது கசல்களின் முக்கிய கருப்பொருள்களாக இருந்தன. கஃபீசு-வாசித்தல்; பாரசீக மரபுவழி இசை, காட்சிக் கலைகள், வனப்பெழுத்து ஆகியவற்றில் இவரது பாடல்கள் அடிக்கடி பயன்படுதல் என்பன ஈரானியச் சமூகத்தில் இவர் இன்றும் நிலைத்திருப்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இவருடைய சமாதிக் கட்டிடம் ஈரானியக் கட்டிடக்கலையின் தலை சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சுற்றுலாப் பயணிகளும் இதனைப் பார்க்கச் செல்கின்றனர்.