ஸ்கோப்ஜே
From Wikipedia, the free encyclopedia
ஸ்கோப்ஜே (ஆங்கில மொழி: Skopje, மக்கதோனியம்: Скопје) மக்கடோனியக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினர் இந்நகரிலேயே வசிக்கின்றனர். இது நாட்டின் அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் கலாச்சார மையம் ஆகும். இது பண்டைய உரோமர் காலத்தில் ஸ்கூப்பி (Scupi) என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் ஸ்கோப்ஜே Скопје, நாடு ...
ஸ்கோப்ஜே
Скопје | |
---|---|
நகரம் | |
ஸ்கோப்ஜே நகரம் Град Скопје | |
நாடு | மாக்கடோனியக் குடியரசு |
உள்ளூராட்சி | பெரிய ஸ்கோப்ஜே |
அரசு | |
• மேயர் | Koce Trajanovski |
பரப்பளவு | |
• மொத்தம் | 571.46 km2 (220.64 sq mi) |
ஏற்றம் | 240 m (790 ft) |
மக்கள்தொகை (2002)[1] | |
• மொத்தம் | 5,06,926 |
• அடர்த்தி | 890/km2 (2,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
அஞ்சற் குறியீடு | 1000 |
இடக் குறியீடு | +389 02 |
Car plates | SK |
Patron saint | கன்னி மேரி |
இணையதளம் | skopje.gov.mk |
மூடு
இந்நகரம் அமைந்துள்ள பிரதேசம் கி.மு. 4000 ஆண்டுகளிற்கு முன்னதாகவே மக்கள் குடியேற்றம் உடைய பிரதேசம் ஆகும். புதிய கற்கால குடியேற்றங்களின் எச்சங்கள் நவீன நகரத்தினை நோக்கி இருக்கின்றதாக அமைந்துள்ள கேல் கோட்டையில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கி.பி முதலாம் நூற்றாண்டளவில் உரோமர்களால் கைப்பற்றப்பட்ட இக்குடியேற்றம் ஒரு படைத்தளமாக மாற்றப்பட்டது[2][3].