ஸ்காகெராக்
நார்வே சுவீடன் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள கடல் / From Wikipedia, the free encyclopedia
ஸ்காகெராக் ( Skagerrak, (/ˈskæɡəræk/ SKAG-ə-rak, மேலும் US: /ˈskɑːɡərɑːk/ SKAH-gə-rahk,[1][2][3] டேனிய மொழி: [ˈskæːɪ̯ɐʁæk], நோர்வே மொழி : [ˈskɑːɡərɑk], சுவீடிய மொழி : [ˈskɑːɡɛrak] ) என்பது ஒரு நீரிணை ஆகும். இது நோர்வேயின் தென்கிழக்கு கடற்கரை, சுவீடனின் மேற்கு கடற்கரை மற்றும் டென்மார்க்கின் ஜட்லாண்ட் தீபகற்பம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு நீரிணை ஆகும். இது வடகடல் மற்றும் கட்டேகாட் நீர்சந்தி ஆகியவற்றை இணைத்து, பால்டிக் கடல் உருவாக வழிவகுக்கிறது.
ஸ்காகெராக் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியியல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கப்பல்கள் சென்று வருகின்றன. இது தீவிர மீன்பிடித் தொழிலுக்கும் சாதகமாக உள்ளது. [4] மனிதர்களின் நேரடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இதனால் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஸ்காகெராக் பிராந்தியத்தில் ஒசுலோ மட்டுமே பெரிய நகரமாக உள்ளது.