From Wikipedia, the free encyclopedia
வொலக்தா மாகாணம் (Vologda Oblast, உருசியம்: Вологодская область, வொலக்கொட்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் வொலக்தா ஆகும். இதன் மக்கள்தொகை: 1,202,444 (2010 கணக்கெடுப்பு).[8] பிராந்தியத்தின் பெரிய நகரம் செரிபோவிட்சு ஆகும். பெரிய உலோக ஆலை நிறுவனமான செவெர்ஸ்தாலின் இந்த மாகாணம் சார்ந்த தொழில் நிறுவனமாகும். வொலக்தா மாகாணம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டது.
வொலக்தா மாகாணம் Vologda Oblast | |
---|---|
Вологодская область | |
பண்: எதுவுமில்லை[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[2] |
பொருளாதாரப் பகுதி | வடமேற்கு[3] |
நிர்வாக மையம் | வொலக்தா[4] |
அரசு | |
• நிர்வாகம் | வொலக்தா சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | ஒலெக் குவ்சின்னிக்கோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,45,700 km2 (56,300 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 25வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 12,02,444 |
• மதிப்பீடு (2018)[9] | 11,76,689 (−2.1%) |
• தரவரிசை | 42வது |
• அடர்த்தி | 8.3/km2 (21/sq mi) |
• நகர்ப்புறம் | 70.7% |
• நாட்டுப்புறம் | 29.3% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-VLG |
அனுமதி இலக்கத்தகடு | 35 |
OKTMO ஐடி | 19000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.vologda-oblast.ru/ |
வொலக்தா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே அர்காங்கெல்சுக் மாகாணம், கிழக்கே கீரொவ் மாகணம், தென்கிழக்கே கொசுத்துரோமா மாகாணம், தெற்கே யாரோசிஉலாவ் மாகாணம், தென்மேற்கே துவெர், நோவ்கோரத் மாகாணம், மேற்கே லெனின்கிராத் மாகாணம், வடமேற்கே கரேலியா ஆகியன உள்ளன. வொலக்தா ஒப்லாஸ்து கிழக்கு ஐரோப்பிய சமவெளியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் காடுகளும் மலைப்பாங்கான நில அமைப்பும் கொண்டது.
வொலக்தா ஒப்லாசுது மக்கள் தொகை: 1,202,444 ( 2010 கணக்கெடுப்பு ); 1,269,568 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,353,870 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
^மற்றவர்கள் - 1.7%
2009 - 1.61 | 2010 - 1.60 | 2011 - 1.68 | 2012 - 1.84 | 2013 - 1.85 | 2014 - 1.85 (எதிர்பார்ப்பு)
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி,[15] வொலக்தா மாகாணம் மக்கள்தொகையில் 29.5% உருசிய மரபுவழித் திருச்சபைச் சேர்ந்தவர்கள், 2% பொதுவான கிருத்தவர்கள், 1% கிழக்கு மரபுவழி திருச்சபையைச் சேர்ந்தவர்கள், 1% ஸ்லாவிக் பழங்குடி மதப்பிரிவினர், 1% பழைய நம்பிக்கையாளர், 39% கடவுள் நம்பிக்கையுள்ள ஆனால் மத ஈடுபாடு அற்றவர்கள் 20% நாத்திகர், 6.5% பிற மதத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.