வெல்லிங்டன் பாசறை நகரம்
From Wikipedia, the free encyclopedia
வெல்லிங்டன் பாசறை நகரம், (Wellington Canntonment Town) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், குன்னூர் நகரத்திற்கு வடக்கே 3 கீமீ தொலைவில் 1,700 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த வெல்லிங்டன் இராணுவ நகரம் ஆகும். 4,949 வீடுகள் கொண்ட வெல்லிங்டன் இராணுவ நகரம், ஏழு வார்டு உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இக்குழுவின் அலுவல்முறை தலைவராக, வெல்லிங்டன் கண்டோன்மென்ட்டின் தலைமை நிர்வாகியான பிரிகேடியர் இருப்பார். மேலும் இராணுப் பாசறையின் ஒரு மருத்துவர் மற்றும் பொறியாளர் நிர்வாகக் குழுவில் இருப்பர். [1] இங்கு முப்படை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. [2]
விரைவான உண்மைகள் வெல்லிங்டன், நாடு ...
வெல்லிங்டன் | |
---|---|
பாசறை நகரம் | |
ஆள்கூறுகள்: 11.37°N 76.8°E / 11.37; 76.8 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நீலகிரி |
ஏற்றம் | 1,855 m (6,086 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,462 |
அலுவல் மொழி | |
• அலுவல் மொழிகள் | தமிழ், ஆங்கிலம், இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | http://www.cbwellington.in/adm.php |
மூடு