இந்திய எழுத்தாளர் மற்றும் கவிஞர் From Wikipedia, the free encyclopedia
வீர் சிங் (ஆங்கிலம்:Vir Singh ) (பிறப்பு: 1872 திசம்பர் 5 - இறப்பு: 1957 சூன் 10) பஞ்சாபின் அமிருதசரசுவில் பிறந்த இவர் ஒரு இந்தியக் கவிஞரும், அறிஞரும் மற்றும் சீக்கிய மறுமலர்ச்சி இயக்கத்தின் இறையியலாளரும் ஆவார். பஞ்சாபி இலக்கிய பாரம்பரியத்தை புதுப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை மற்றும் செல்வாக்குமிக்கவையாக இருந்தன. அவர் பாய் என்ற புனிதராக பட்டம் சூட்டப் பெற்றார். இது சீக்கிய நம்பிக்கையின் துறவியாகக் கருதப்படக்கூடியவர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் மரியாதையாகும்.
வீர் சிங் | |
---|---|
பிறப்பு | [1] அமிருதசரசு, Punjab, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 5 திசம்பர் 1872
இறப்பு | 10 சூன் 1957 84) அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா | (அகவை
தொழில் | கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பாடல் இசையமைப்பாளர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். |
மொழி | பஞ்சாபி |
தேசியம் | இந்தியன் |
கல்வி | மெட்டிரிகுலேசன் |
கல்வி நிலையம் | அமிர்தசரசு தேவாலய மிஷன் பள்ளி |
காலம் | 1891 |
இலக்கிய இயக்கம் | சிரோமணி அகாலி தளம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சுந்தரி (1898), பிஜய் சிங் (1899), சத்வந்த் கவுர் , "ராணா சூரத் சிங்" (1905)[2] |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது, 1955[3] and the பத்ம பூசண் (1956)[4] |
துணைவர் | மாதா சதர் கவுர் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
இணையதளம் | |
bvsss |
1872 ஆம் ஆண்டில், அமிர்தசரசுவில் பிறந்த பாய் வீர் சிங் முனைவர் சரண் சிங்கின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார். வீர் சிங்கின் குடும்பத்தினர் அதன் வம்சாவளியை முல்தான் நகரின் துணை ஆளுநர் (மகாராஜா பகதூர்) திவான் கௌரா மால் வரை காணலாம். அவரது தாத்தா, கான் சிங் (1788-1878), இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், மடங்களில் பாரம்பரிய சீக்கிய பாடங்களைக் கற்றுத்தரவும் தனது காலத்தைச் செலவிட்டார். சமசுகிருதம் மற்றும் பிரஜ் மொழிகளிலும், கிழக்கித்திய மருத்துவ முறைகளிலும் ( ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானிபோன்றவை ) சரளமாக விளங்கினார் . அவரது ஒரே மகனான டாக்டர் சரண் சிங் தந்தையால் ஈர்க்கப்பட்டார். பின்னர், சீக்கிய சமூகத்தின் தீவிர உறுப்பினராக விர் சிங் பிறந்தார், சீக்கிய சமூகத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கவிதை, இசை மற்றும் எழுத்துக்களைத் தயாரித்தார். பதினேழு வயதில், பாய் வீர் சிங் தானே சதர் கவுர் என்பவரை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். அவர் 1957 சூன் 10 அன்று அமிர்தசரசில் இறந்தார். [5]
பாய் வீர் சிங் ஜி பாரம்பரிய சுதேச கற்றல் மற்றும் நவீன ஆங்கிலக் கல்வி ஆகிய இரண்டின் பலனையும் கொண்டிருந்தார். அவர் சீக்கிய வேதத்தையும் பாரசீக, உருது மற்றும் சமசுகிருதத்தையும் கற்றுக்கொண்டார். பின்னர் அமிர்தசரசு தேவாலய மிஷன் பள்ளியில் சேர்ந்தார். மற்றும் 1891 இல் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். சிங் தனது இடைநிலைக் கல்வியை தேவாலய மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் போது தானும் தனது சில வகுப்பு தோழர்களும் சீக்கிய மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாற்றக் கட்டாயபடுத்தப்பட்டபோது, சீக்கிய மதத்தைப் பற்றிய சிங்கின் சொந்த மத நம்பிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. கிறித்துவ தொண்டு நிறுவனங்களின் இலக்கிய ஆதாரங்களைப் பயன்படுத்துவதிலும் குறிப்பிடுவதிலும் செல்வாக்கு செலுத்திய சிங், தனது சொந்த எழுதப்பட்ட வளங்களின் மூலம் சீக்கிய மதத்தின் முக்கிய கோட்பாடுகளை மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கான யோசனையைப் பெற்றார். தனது ஆங்கில படிப்புகள் மூலம் கற்றுக்கொண்ட நவீன இலக்கிய வடிவங்களில் உள்ள திறன்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி, சிங் கதைகள், கவிதைகள் மற்றும் காவியங்களைத் தயாரித்து சீக்கிய மதத்தின் வரலாறு மற்றும் தத்துவக் கருத்துக்களைப் பதிவு செய்தார். [6]
சிங் ஒரு எழுத்தாளராக தன்னைத் தேர்வு செய்தார். தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர் தனது தந்தையின் நண்பரான வசீர் சிங்குடன் பணிபுரிந்தார். மேலும் ஒரு அச்சகத்தை அமைத்தார். சில பள்ளிகளுக்கான புவியியல் பாடப்புத்தகங்கள் எழுதவும் அச்சிடவும் அவர் பெறப்பட்ட முதல் பணியாகும். [6]
பாய் வீர் சிங் 'சிங் சபை இயக்க'த்தின் விவகாரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அதன் நோக்கங்களையும் பொருள்களையும் மேம்படுத்துவதற்காக, அவர் 1894 இல் கால்சா டிராக்ட் சொசைட்டியைத் தொடங்கினார். கல்சா டிராக்ட் சங்கம் தயாரித்த துண்டுப்பிரதிகள் ஒரு புதிய பாணி இலக்கிய பஞ்சாபியை அறிமுகப்படுத்தின.
பாய் வீர் சிங் பஞ்சாப் & சிந்து வங்கியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
1955 இல் சாகித்திய அகாதமி விருதும், 1956 இல் பத்ம பூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது . [7]
1972 ஆம் ஆண்டில் பாய் சாகிப்பின் பிறந்த நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் இந்திய அரசு ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது.
ஆதி கிரந்தம் குறித்த அவரது வர்ணனையின் பகுதி - பரிசுத்த புத்தகத்தின் கிட்டத்தட்ட ஒரு பாதி - அவர் முடித்த ஏழு பெரிய தொகுதிகளில் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.