வி கா ஜோன்
From Wikipedia, the free encyclopedia
வி கா ஜோன் (ஆங்கில மொழி: Wi Ha joon) (பிறப்பு: ஆகத்து 5, 1991)[2] என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். ஜோன் ஆகத்து 5, 1991 ஆம் ஆண்டில் தெற்கு ஜியோலா மாகாணத்தில் உள்ள வாண்டோ கவுண்டியில் பிறந்தார்.
விரைவான உண்மைகள் வி கா ஜோன், பிறப்பு ...
வி கா ஜோன் | |
---|---|
செப்டம்பர் 2021 இல் வி | |
பிறப்பு | வி கியூன் யி ஆகத்து 5, 1991 (1991-08-05) (அகவை 32) வாண்டோ கவுண்டி, தெற்கு ஜியோலா மாகாணம், தென் கொரியா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2012–இன்று வரை |
முகவர் | எம்எஸ் டீம் என்டர்டெயின்மென்ட்[1] |
மூடு
இவர் 2012 இல் பீஸ் இன் தேம் என்ற குறும்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து காயின் லாக்கர் கேர்ள் (2015), பேட் கைஸ் அல்வய்ஸ் டை (2015), கேர்ள் காப்ஸ் (2019), மிட்னயிட் (2021)[3] போன்ற திரைப்படங்களிலும் குட் பாய் மிஸ்டர் பிளாக் (2016), மை கோல்டன் லைப் (2017),[4] 18 அகைன் (2020),[5] இசுக்விட் கேம் (2021),[6][7] கியோங்சியோங் கிரியேச்சர் (2023) போன்ற தொடர்களிலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.