விழா
2013இல் வெளியான தமிழ் படம் From Wikipedia, the free encyclopedia
2013இல் வெளியான தமிழ் படம் From Wikipedia, the free encyclopedia
விழா (Vizha) 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய தமிழ் திரைப்படமாகும்.[1] இதில் மகேந்திரன் , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் பறை வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரிப் பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.[3] படம் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரவீன் கே. எல் - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.[4] ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக ராம நாராயணன், சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[5] இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.[3]
விழா | |
---|---|
Theatrical release poster | |
இயக்கம் | பாரதி பாலகுமாரன் |
தயாரிப்பு | ராம நாராயணன் சுனிர் தேதார்பால் கே. ஜி. ஜெயவேல் பாலமுருகன் |
கதை | பாரதி பாலகுமாரன் |
இசை | ஜேம்ஸ் வசந்தன் |
நடிப்பு | மகேந்திரன் மாளவிகா மேனன் |
ஒளிப்பதிவு | யூ. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் என். பி ஸ்ரீகாந்த் |
கலையகம் | தேனாண்டாள் படங்கள் அழூர் என்டர்டெயின்மென்ட் ஜேவி மீடியா ட்ரீம்ஸ் |
வெளியீடு | 27 திசம்பர் 2013 |
ஓட்டம் | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.