From Wikipedia, the free encyclopedia
வியட்நாமியப் பண்பாடு (culture of Vietnam) தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழைய பண்பாடாகும். இது வெண்கலக் கால தோங் சோன் பண்பாட்டில் தொடங்கியதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[1]வியட்நாம் 1000 ஆண்டுகளாக சீன ஆட்சியில் இருந்ததால், வியட்நாம், அரசியல், அரசு அமைப்பு, கன்பூசிய சமூக, ஒழுக்கநெறி, கலை ஆகியவற்றில் பேரளவு சீனப் பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்றுள்ளது. வியட்நாம் கிழக்காசியப் பண்பாட்டின் பகுதியாகக் கருதப்படுகிறது.[2]
சீனா பத்தாம் நூற்றாண்டில் விடுதலை பெற்றதும், தெற்காக விரிவடையத் தொடங்கி, சாம்பா நாகரிகம் சார்ந்த பல பகுதிகளையும் (இப்போது நடுவண் வியட்நாமில் உள்ள பகுதிகளையும்) கேமர் பேரரசின் பல பகுதிகளையும் (இப்போது இக்காலத் தென்வியட்நாமில் உள்ள பகுதிகளையும்) இணைத்துகொண்ட்து. எனவே, வியட்நாமியப் பண்பாட்டில் சிறுசிறு வட்டாரக் குழுக்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பிரெஞ்சு இந்தோசீனக் காலத்தில், வியட்நாம் பண்பாட்டில் ஐரோப்பியரிடம் இருந்து பல்வேறு தாக்கங்கள் ஏற்கப்பட்டன.இவற்றில் கத்தோலிக்கச் சமயத் தாக்கமும் இலத்தின நெடுங்கணக்கின் பரவலும் அடங்கும். இதற்கு முன்பு, வியட்நாமியர் கான் தூ எனும் சீன பட எழுத்துகளையும் சூ நோம் எனும் வியட்நாம் சொற்களுக்காக புதிதாக கண்டுபிடித்த எழுத்துருக்களோடு சீன பட எழுத்துகள் இணைந்த எழுத்துமுறையைப் பின்பற்றினர்.
சமூக ஆட்சிநிலையைப் பொறுத்தவரையில், இலாங் (làng) (ஊர்) , நுவோசு (nước) (நாடு) ஆகிய இரு அலகுகள் முதன்மையானவை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பணைந்தவையாக வியட்நாமியர் கருதுகின்றனர். இடைநிலை அலகுகளாக குவான் (quận) (மாவட்டம்), "சா (xã)" (துணைமாவட்டம்), தின் (tỉnh) (ஊரக ஆயம்) ஆகியவை அமைகின்றன.
வியட்நாமில் சுற்றமுறை உறவுகள் முதன்மையான பாத்திரம் வகிக்கின்றன. மேலைப் பண்பாட்டைப் போல தனிமாந்தவாதத்தைப் பின்பற்றாமல், கீழைப் பண்பாடு குடும்பப் பாத்திரத்தையும் இனக்குழு (குல) உறவையும் முதன்மைப்படுத்துகிறது[சான்று தேவை]. கீழைப் பண்பாடுகளோடு ஒப்பிடும்போது, சீனப் பண்பாடு இனக்குழுவை (குலத்தை) விட குடும்பத்துக்கும் வியட்நாம் பண்பாடு குடும்பத்தை விட இனக்குழு (குல) உறவுக்கும் முதலிடம் தருகின்றன.ஒவ்வொரு குலத்துக்கும் குலத்தலைவரும் பொதுமன்றமும் அமைவதுண்டு. கொண்டாட்டங்கலில் முழு குலமும் பொதுமன்றத்தில் கலந்துகொள்ளும்.
வியட்நாமியர் பெரும்பாலும் குருதி உறவால் பிணைந்தவரே. இந்நிலை ஊர்ப்பெயர்களில் இன்றும் உள்ளது. ஊரின் பெயர் தாங்சா என்றால் தாங் குலத்தவர் வாழும் இடம் என்று பொருள்படும். இதேபோல, சாவு சா, இலே சா என ஊர்ப்பெயர்கள் அமைகின்றன.மேற்கு மேட்டுநிலச் சமவெளிகளில் ஒரு குலம் முழுவதும் ஒரே நீண்ட வீட்டில் வாழும் மரபு ஓங்கலாக உள்ளது. பெரும்பாலான வியட்நாமியர் ஊரகங்களில் ஒரே கூரையின் கீழ் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் வாழ்கின்றனர்.
மரபு வியட்நாமிய நிகழ்ச்சிகளில் மரபு வியட்நாமியத் திருமணம் மிகவும் முதன்மை வாய்ந்ததாகும். மேலைப் பண்பாட்டுத் தாக்கங்களையும் தாண்டி, மரபு வியட்நாமியத் திருமணத்தில் பண்டைய பழக்கவழக்கங்கள் தொடர்ந்து உள்நாட்டு வியட்நாமியராலும் புலம்பெயர் வியட்நாமியராலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவற்றில் மேலை, கீழைப் பண்பாட்டுக் கூறுபாடுகள் ஒருங்கிணைந்துள்ளன
கடந்த காலத்தில் ஆண்களும் பெண்களும் இளமையிலேயே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. திருமணங்கள் பெற்றோராலோ கூட்டுக்குடும்பத்தாலோ ஏற்பாடு செய்யப்பட்டன, மணமக்களுக்கு எந்த உரிமையும் அப்போது தரப்படவில்லை. இன்றைய வியட்நாமில் இது மாறிவிட்டது. மக்கள் தம் மணனாழ்க்கைத் துணவர்களைத் தாமே தேர்வு செய்கின்றனர்.[3]
பொதுவாக, வியட்நாமியத் திருமணத்தில் இரு முதன்மையான சடங்குகள் நடத்தப்படுகின்றன: அவை உறுதித் தாம்பூலச் சடங்கு, திருமண விழா என்பனவாகும்.[3]
காண்க, வியட்நாமில் தொலைத்தொடர்புகள்
வியட்நாமில் பன்னாட்டுப் பேரவை பட்டையலிட்ட பல உலக மரபு நினைவிடங்களும் பண்பாட்டு நுண்மரபிடங்களும் உள்ளன. இவை பின்வரும் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
வியட்நாமில் மேலும் பல மரபிடங்களும் நுண்மரபிடங்களும் உள்ளன. இவற்றுக்கான ஆவணத்தை அரசு, எதிர்காலத்தில் பன்னாட்டுப் பேரவையின் ஒப்புதலைப் பெற உருவாக்கியுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.