வின்னித்சியா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வின்னித்சியா மாகாணம் (Vinnytsia Oblast) உக்ரைன் நாட்டின் தென்மேற்கில் அமைந்த மாகாணம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் வின்னித்சியா நகரம் ஆகும். 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 15,29,123 ஆக இருந்தது.
வின்னித்சியா மாகாணம்
Вінницька область | |
---|---|
வின்னித்ஸ்கா மாகாணம்[1] | |
ஆள்கூறுகள்: 48.93°N 28.69°E | |
நாடு | உக்ரைன் |
தலைநகரம் | வின்னித்சியா |
அரசு | |
• ஆளுநர் | செர்கி போர்சோவ்[2] |
• வின்னித்சியா மாகாண சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | அனடோலி ஒலியினிக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,513 km2 (10,237 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 12-ஆம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 15,29,123 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 21000-23999 |
வட்டார குறியீடு | +380-43 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:UA |
மாவட்டங்கள் | 27 |
நகரங்கள் (மொத்தம்) | 18 |
• மண்டல நகரங்கள் | 12 |
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 29 |
கிராமங்கள் | 1466 |
FIPS 10-4 | UP23 |
இணையதளம் | www.vin.gov.ua |
வின்னித்சியா மாகாணத்தின் வடக்கில் சைதோமிர் மாகாணம், வடகிழக்கில் கீவ் மாகாணம், கிழக்கில் செர்கசி மாகாணம் மற்றும் கிரோவோக்ராட் மாகாணம், தெற்கில் திரான்சுனிஸ்திரியா மற்றும் மால்டோவா நாடுகள், மேற்கில் செர்னிவ்சி மாகாணம் மற்றும் கமெல்னிட்ஸ்கி மாகாணம், தென்கிழக்கில் ஒடெசா மாகாணம் எல்லைகளாக உள்ளது.
இம்மாகாணத்தின் ஊடாக தினேப்பர் ஆறு பாய்கிறது. இது மால்டோவா நாட்டுடன் 202 கிலோ மீட்டர் நீளத்திற்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இது உள்நாட்டில 7 உக்ரைனிய மாகாணங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இம்மாகாணம் பல கருங்கல், பழுப்பு நிலக்கரி, பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள் நிறைந்தது. உலகின் பெரிய 800 மில்லியன் டன் அளவிற்கு தூய வெள்ளை களிமண் சுரங்கங்கள் கொண்டது. மேலும் வெந்நீர் ஊற்றுகள் கொண்டது.
இம்மாகாணம் அனல் மின் நிலையங்கள் அதிகம் கொண்டது. மேலும் 39 சர்க்கரை ஆலைகளும், 13 மதுபான தொழிற்சாலைகளும் கொண்டது. மேலும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளும் கொண்டுள்ளது.
இம்மாகாணம் 27 மாவட்டங்கள், 18 நகரங்கள், 1466 கிராமங்கள் கொண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.