உருசிய இயற்பியலாளர் From Wikipedia, the free encyclopedia
வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg, (உருசியம்: Вита́лий Ла́заревич Ги́нзбург; அக்டோபர் 4, 1916 – நவம்பர் 8, 2009) என்பவர் உருசியாவைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானியற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் சோவியத்தின் ஐதரசன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவராவார்[1]. இவர் ஈகர் தம்மை அடுத்து இயற்பியல் கழகத்தின் (லேபெடெவ் இயற்பியல் கழகம்) கொள்கை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தவர்.
வித்தாலி கீன்ஸ்புர்க் Vitaly L. Ginzburg | |
---|---|
பிறப்பு | மாஸ்கோ, உருசியப் பேரரசு | அக்டோபர் 4, 1916
இறப்பு | நவம்பர் 8, 2009 93) மாஸ்கோ, உருசியா | (அகவை
தேசியம் | உருசியா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | லேபெடெவ் இயற்பியல் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஈகர் தம் |
அறியப்படுவது | பிளாசுமா, superfluidity |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2003) இய்ற்பியலுக்கான ஊல்ஃப் பரிசு (1994/95) |
வித்தாலி கீன்ஸ்புர்க் 1916 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1938 ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்று1940 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தையும் பின்னர் 1942 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் உள்ள லேபெடெவ் இயற்பியல் கல்லூரியில் பணியாற்றினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.