![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Wind_probe.jpg/640px-Wind_probe.jpg&w=640&q=50)
விண்டு (விண்கலம்)
From Wikipedia, the free encyclopedia
குளோபல் ஜியோஸ்பேஸ் சயின்ஸ் (GGS) விண்டு விண்கலம் என்பது சூரியக் காற்று, புவியின் காந்த மண்டலத்தில் நிகழும் கதிரலைகளையும் மின்மத்தையும் ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் ஒரு அறிவியல் விண்கலம் ஆகும். இது 1994 நவம்பர் 1 அன்று 09:31:00 ஒபொநே மணியளவில் புளோரிடா, மெரிட் தீவில் உள்ள கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்தில் மெக்டோனல் டக்ளசு டெல்டா II 7925 - 10 ஏவூர்தி வழியாக ஏவப்பட்டது. நியூ ஜெர்சியின் கிழக்கு வின்ட்சர் நகரியத்தில் உள்ள மார்ட்டின் மேரியெட்டா வான், விண்வெளி பிரிவால் விண்டு விண்கலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கபட்டது. இந்த செயற்கைக்கோள் தற்சுழற்சி நிலைப்படுத்தப்பட்ட உருளை வடிவ செயற்கைக்கோள் ஆகும் , இதன் விட்டம் 2.4 மீட்டர் (7 அடி 10 அங்குலம்), உயரம் 1.8 மீட்டர் (5 அடி, 11 அங்குலம்) ஆகும் .
![]() Wind satellite is the first of NASA's Global Geospace Science program | |||||||||||||||||||
திட்ட வகை | Heliophysics | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | NASA | ||||||||||||||||||
காஸ்பார் குறியீடு | 1994-071A | ||||||||||||||||||
சாட்காட் இல. | 23333 | ||||||||||||||||||
இணையதளம் | http://wind.nasa.gov/ | ||||||||||||||||||
திட்டக் காலம் | 3 years (planned) 29 ஆண்டு-கள், 6 மாதம்-கள், 9 நாள்-கள் (in progress) | ||||||||||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||||||||||
தயாரிப்பு | Martin Marietta | ||||||||||||||||||
ஏவல் திணிவு | 1,250 kg (2,760 lb) [1] | ||||||||||||||||||
உலர் நிறை | 950 kg (2,090 lb) | ||||||||||||||||||
ஏற்புச்சுமை-நிறை | 195 kg (430 lb) | ||||||||||||||||||
பரிமாணங்கள் | 2.4 × 1.8 m (7 அடி 10 அங் × 5 அடி 11 அங்) | ||||||||||||||||||
திறன் | 370 watts | ||||||||||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||||||||||
ஏவப்பட்ட நாள் | 1 November 1994, 09:31:00 UTC | ||||||||||||||||||
ஏவுகலன் | Delta II 7925-10 (Delta 227) | ||||||||||||||||||
ஏவலிடம் | Cape Canaveral, SLC-17B | ||||||||||||||||||
ஒப்பந்தக்காரர் | McDonnell Douglas | ||||||||||||||||||
திட்ட முடிவு | |||||||||||||||||||
கடைசித் தொடர்பு | 2070 (planned) | ||||||||||||||||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||||||||||||||||
Reference system | Heliocentric orbit | ||||||||||||||||||
சுற்றுவெளி | L1 Lagrange point | ||||||||||||||||||
Sun சுற்றுக்கலன் | |||||||||||||||||||
சுற்றுப்பாதையில் இணைதல் | May 2004 | ||||||||||||||||||
| |||||||||||||||||||
![]() Wind mission patch
|
விண்கலத்தின் முதல்ல் பணியாகச் சூரியனை எல் 1 லாக்ராஞ்சியன் புள்ளியில் சுற்றுவதாகவே இருந்தது. ஆனால்காந்த மண்டலத்தையும் நிலாச் சூழலுக்கும் அருகில் ஆய்வு செய்ய சூரிய, எல்லியக் கோள நோக்கீட்டகமும் (SOHO) மேம்பட்ட உட்கூறு தேட்டக்கலமும் (ACE) அதே இடத்திற்கு அனுப்பப்படத் திட்டம்மிட்டதால், இதன் ஏவுதலும் தாமதமானது. விண்டு 2004 மே முதல் தொடர்ந்து எல் 1 புள்ளியில் உள்ளது மற்றும் 2023[update] தொடர்ந்து இயங்கி வருகிறது. 2023[update] ஆம் ஆண்டு நிலவரப்படி விண்டு தற்போது குறைந்தது 2070 வரை எல் 1 புள்ளியில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் அளவுக்கு எரிபொருளைக் கொண்டுள்ளது.[2] விண்டு தொடர்ந்து தரவுகளைத் திரட்டி வருகிறது , மேலும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 6,780 க்கும் மேற்பட்ட அறிவியல் வெளியீடுகளுக்கு தரவுகளைப் பங்களித்துள்ளது.
கிரீன்பெல்ட் மேரிலாந்தில் உள்ள கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தில் கட்டிடம் 14 இல் உள்ள பல திட்ட செயல்முறைகள் மையத்தில் (எம். எம். ஓ. சி) இருந்து பணி நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. ஸ்பீடாஸ் மென்பொருளைப் பயன்படுத்தி காற்றுத் தரவை அணுகலாம். விண் டு என்பது ஜி. ஜி. எஸ். முனையத்தினனுடன்பிறப்பு விண்கலம் ஆகும் ஆகும்.