![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Vijay_Deverakonda_at_NOTA_pressmeet.jpg/640px-Vijay_Deverakonda_at_NOTA_pressmeet.jpg&w=640&q=50)
விஜய் தேவரகொண்டா
இந்திய தெலுங்கு மொழி நடிகர் / From Wikipedia, the free encyclopedia
விஜய் தேவரகொண்டா (9 மே 1989) (Vijay Deverakonda) தெலுங்கு சினிமாவில் பெயர் பெற்ற ஒரு இந்திய திரைப்பட நடிகர். விஜய் தேவரகொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா (2011) மூலம் அறிமுகமானார்[2] , ஆனால் அவர் யெவடே சுப்பிரமணியம் (2015) படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார் .
விஜய் தேவரகொண்டா | |
---|---|
![]() நோட்டா திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா | |
பிறப்பு | விஜய் சாய் தேவெரகொண்டா (இயற்பெயர்) 9 மே 1989 (1989-05-09) (அகவை 35)[1] அச்சம்பேட், நகர்கர்னூல் மாவட்டம் |
இருப்பிடம் | ஹைதராபாத், தெலங்கானா |
கல்வி | பி.காம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பள்ளி :1. ஸ்ரீ சத்ய சாய் ஹையர் செகண்டரி ஸ்கூல் புட்டபர்த்தி.
2. லிட்டில் ஃபிளவர் ஜூனியர் ஸ்கூல் , ஹைதராபாத். கல்லூரி: பத்ருக்கா காலேஜ் ஆஃப் காமர்ஸ்,ஹைதராபாத். |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போதும் |
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விஜய் 2016 பிளாக்பஸ்டர் காதல் நகைச்சுவை படமான பெல்லி சூப்புலுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு என விருது பெற்றார் . விஜய் தெலுங்கு சினிமா வின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார், அர்ஜுன் ரெட்டி (2017), மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) (2018), ரஸ்மிகாவுடன் நடித்த கீத கோவிந்தம் (2018), மற்றும் டாக்ஸிவாலா (2018), போன்றவை அதிக வசூல் செய்த அவரின் தெலுங்கு படங்களின் பட்டியல். அர்ஜுன் ரெட்டிஇல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றது.[3][4]