From Wikipedia, the free encyclopedia
எட்வார்டு வால்டேர் மவுண்டர் (Edward) Walter Maunder) (12ஏப்பிரல் 1851 – 21 மார்ச்சு 1928) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் தன் சூரியக் கரும்புள்ளி ஆய்வுக்காகவும் மவுண்டர் சிறுமம் என வழங்கும் சூரியக் காந்த வட்டிப்பு அல்லது காந்தச் சுழற்சிக்காகவும் நினைவுகூரப்படுபவர். இந்தக் காந்த வட்டிப்பை 1645 முதல் 1715 வரை அமைந்ததை இனங்கண்டார்.
(எட்வார்டு) வால்டேர் மவுண்டர் (Edward) Walter Maunder | |
---|---|
பிறப்பு | இலண்டன் | 12 ஏப்ரல் 1851
இறப்பு | 21 மார்ச்சு 1928 76) | (அகவை
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | மவுண்டர் சிறுமம் |
துணைவர் | எடித் அன்னா பசுடின் (1875–1888) அன்னி சுகாட் டில் இரசல் (1895–1928) |
மவுண்டர் 1851 இல் ஜான் வெசுலேயக் கழக அமைச்சரின் இளைய மகனாக இலண்டனில் பிறந்தார். இவர் இலண்டன் கிங் கல்லூரியில் கல்வி கற்றார். ஆனால் பட்டம் ஏதும் பெறவில்லை. இவர் தன் ஆய்வுகளுக்கு தேவைப்படும் நிதிக்காக வங்கி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.
இவர் 1873 இல் கிரீன்விச் அரசு வான்காணகத்துக்கு திரும்பி வந்து கதிர்நிரலியல் உதவியாளராகச் சேர்ந்தார். இவர் 1875க்குப் பிறகு எடித் ஆன்னாவை மணந்தார். இவர் நான்கு மகன்களாகவும் இரண்டு பெண்களாகவும் ஆறு குழந்தைகளைப் பெற்றார். ஒரு மகன் குழந்தையாகவே இறந்துவிட்டார். [1]எடித் 1888 இல் இறந்ததும் இவர் 1890 இல் ஆன்னி சுகாட் டில் இரசலைச் சந்தித்தார் (பின்னர் ஆன்னி இரசல் மவுண்டர், 1868–1947). இரச்சல் கேம்பிரிட்ஜ் கிர்ட்டன் கல்லூரியில் படித்த வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் மவுண்டருடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இரசல் அந்த வான்காணகத்தில் 1890 முதல் 1895 வரை மாந்தக் கணினியாக விளங்கினார்.
இவர் 1895 இல் இரசலை மணந்தார். ஆன்னி மவுண்டர் 1916 இல் அரசு வானியல் கழகம் ஏற்ற முதல் பெண் வானியலாளரானார்.
இவர் 1890 இல் பிரித்தானிய வானியல் கழகத்தை நிறுவுவதில் முன்னோடியாக விளங்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.