![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Tirumullaivayil2.jpg/640px-Tirumullaivayil2.jpg&w=640&q=50)
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் / From Wikipedia, the free encyclopedia
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]
விரைவான உண்மைகள் தேவாரம் பாடல் பெற்ற வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், புவியியல் ஆள்கூற்று: ...
தேவாரம் பாடல் பெற்ற வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் | |
---|---|
![]() | |
புவியியல் ஆள்கூற்று: | 13.136570°N 80.132290°E / 13.136570; 80.132290 |
பெயர் | |
பெயர்: | வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமுல்லைவாசல் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாசிலாமணீஸ்வரர் (பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்) |
தாயார்: | கொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்) |
தல விருட்சம்: | முல்லை |
தீர்த்தம்: | கல்யாண தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம். |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
மூடு