வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் (ஆங்கிலம்: Northeast Penang Island District; மலாய்: Daerah Timur Laut Pulau Pinang; சீனம்: 马来西亚县份: 东北县); ஜாவி: دايره تيمور لاوت ڤولاو ڤينڠ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் Northeast Penang Island District, நாடு ...
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் Northeast Penang Island District | |
---|---|
![]() வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 5°22′21″N 100°19′03″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | வடகிழக்கு பினாங்கு தீவு |
தொகுதி | புக்கிட் குளுகோர் |
அரசு | |
• உள்ளூராட்சி | பினாங்கு தீவு மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 122.79 km2 (47.41 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 5,10,996 |
• அடர்த்தி | 4,161.5/km2 (10,778/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 100xx - 108xx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
மூடு
இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரம், மாவட்டத்தின் பெரிய நகரமாகவும்; பினாங்கு மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பினாங்குத் தீவின் வடகிழக்குப் பாதியை இந்த ’வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்’ உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு: 122.79 கி.மீ. (47.41 சதுர மைல்).
2010-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 510,996 மக்கள்தொகை கொண்டது. இந்த மாவட்டம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் மேற்கில் எல்லையாகக் கொண்டுள்ளது.