![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Pakistan_and_Waziristan.png/640px-Pakistan_and_Waziristan.png&w=640&q=50)
வசீரிஸ்தான்
From Wikipedia, the free encyclopedia
வசீரிஸ்தான் (Waziristan) (பஷ்தூ மற்றும் உருது: وزیرستان, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானித்தான் எல்லையை ஒட்டி அமைந்த பகுதியாகும். வசிரிஸ்தானின் பரப்பளவு 11,585 சகிமீ ஆகும். இது பெஷாவருக்கு தெற்கில் 364 கிமீ (226.2 மைல்) தொலைவிலும்; ஆப்கானித்தான் தலைநகர் காபூலுக்கு தெற்கில் 442 கிமீ (274.6 மைல்) தொலைவிலும் உள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Pakistan_and_Waziristan.png/640px-Pakistan_and_Waziristan.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c2/FATA_%288%29.jpg/320px-FATA_%288%29.jpg)
வசீரிஸ்தானில் பஷ்தூ மொழி பேசும் இசுலாமிய பஷ்தூன் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர். வசிரிஸ்தான் நிர்வாக வசதிக்காக தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
2018-வரை வசீரிஸ்தான் பாகிஸ்தான் அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்த பழங்குடிப் பகுதிகளில் இருந்தது. 2018 முதல் இப்பகுதி கைபர் பக்துன்வா மாகாணத்தின் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மற்றும் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டங்களாக உள்ளது. [1][2]
2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை5,43,254[3]தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் மக்கள்தொகை 6,74,065 ஆகும். [4].வசீரிஸ்தான் மலைப்பகுதிகளில் ஆப்கானித்தான் தலிபான்களின் தீவிரவாத செயல்களின் கூடாரமாக விளங்குவதை, கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.