லு ஷுந் அல்லது லு ஹ்சுன் (Lu Xun, எளிய சீனம்: 鲁迅; மரபுவழிச் சீனம்: 魯迅; பின்யின்: Lǔ Xùn அல்லது Lu Hsün) என்ற புனைப்பெயருடன் எழுதிய சௌ ஷுறேன் (Zhou Shuren), செப்டம்பர் 25, 1881 – அக்டோபர் 19, 1936) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சீன எழுத்தாளர் ஆவார். நவீன சீன இலக்கியத்தை நிறுவியவராக கருதப்பட்ட இவர், பைஹு (வட்டார மொழி) மற்றும் மரபு சீன மொழியில் எழுதினார் .
இவர் சிறுகதை எழுத்தாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் கவிஞர் ஆவார்.
விரைவான உண்மைகள் லூ சுன், பிறப்பு ...
லூ சுன் |
---|
![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/LuXun1930.jpg/200px-LuXun1930.jpg) |
பிறப்பு | சௌ ஷுறேன் (1881-09-25)செப்டம்பர் 25, 1881 ஷாவசின் , செஜியாங் , சீனா |
---|
இறப்பு | அக்டோபர் 19, 1936(1936-10-19) (அகவை 55) |
---|
புனைபெயர் | லு ஹ்சுன் |
---|
தொழில் | சிறுக்கதை எழுத்தாளர் , விமர்சகர் , கட்டுரையாளர் |
---|
காலம் | 1918-1936 |
---|
மூடு
விரைவான உண்மைகள் பண்டைய சீனம், நவீன சீனம் ...
லூ சுன் |
பண்டைய சீனம் | 魯迅 |
---|
நவீன சீனம் | 鲁迅 |
---|
|
உண்மையான பெயர் |
---|
பண்டைய சீனம் | 周樹人 |
---|
நவீன சீனம் | 周树人 |
---|
Transcriptions |
---|
Standard Mandarin |
---|
Hanyu Pinyin | Zhōu Shùrén |
---|
Wade–Giles | Chou1 Shu4-jen2 |
---|
Gwoyeu Romatzyh | Jou Shuhren |
---|
|
மூடு
மே நான்கு இயக்கத்துக்கு பின் லு ஷுநிந் எழுத்துக்களால் ஒரு மாப்பெரும் தாக்கம் ஏற்பட்ட காரணத்தால், 1949-ஆம் ஆண்டுக்கு பின் கம்யூனிச ஆட்சி அவரை கௌரவபடுத்தியது. லு ஷுநிந் படைப்புகளை தன் வாழ்நாள் முழுதும் ரசித்தவர் மா சே துங். இருப்பினும், சீன கம்யூனிச கட்சியில் லு ஷுந் சேரவில்லை. யாங் ஹ்ஸியெந்-யி மற்றும் கிளாடிஸ் யாங் மொழிபெயர்த்த "லு ஹ்சுனின் கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை" போன்ற மொழிபெயர்ப்புகளால் லு ஷுநிந் படைப்புகள் பல ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகம் ஆனது.