![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/MBIP_City_Forest.jpg/640px-MBIP_City_Forest.jpg&w=640&q=50)
லீமா கெடாய்
மலேசியாவில் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
லீமா கெடாய், (மலாய்: Lima Kedai; ஆங்கிலம்: Lima Kedai; சீனம்: 五间店) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1] கெலாங் பாத்தா நகருக்கும் சுகூடாய் நகருக்கும் இடையில் உள்ளது. [2]
விரைவான உண்மைகள் லீமா கெடாய், நாடு ...
லீமா கெடாய் | |
---|---|
புறநகரம் | |
Lima Kedai | |
![]() லீமா கெடாய் பகுதியில் இசுகந்தர் புத்திரி நகர் வனம் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°30′8.0294″N 103°37′2.7444″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
மாநகரம் | இசுகந்தர் புத்திரி |
உருவாக்கம் | 1940 |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 81300 |
மலேசியத் தொலைபேசி எண் | +6-07 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
மூடு
இந்த லீமா கெடாய் நகர்ப்பகுதி
இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை (Second Link Expressway) பயணிகளுக்கு ஒரு முக்கியமான போக்குவரத்து நகரமாக உள்ளது.
செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் (Senai International Airport); மலேசியா - சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தையும் (Malaysia–Singapore Second Link) இந்த இரண்டாவது இணைப்பு விரைவுச்சாலை இணைக்கிறது.[3]