![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/b/bb/Liverpool_FC.svg.png/640px-Liverpool_FC.svg.png&w=640&q=50)
லிவர்பூல் கால்பந்துக் கழகம்
From Wikipedia, the free encyclopedia
லிவர்பூல் எஃப்.சி. அல்லது லிவர்பூல் கால்பந்து அணி (Liverpool Football Club) என்பது ஒரு இங்கிலாந்தின் கால்பந்து அணியாகும். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் மிகச் சிறந்த காற்பந்துக் கழகமாக இது திகழ்கிறது. இக்கழகம் இங்கிலாந்து கூட்டிணைவை 19 முறை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணி 7 முறை எஃப் ஏ கோப்பையையும், 6 முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவையும், 3 முறை யூஈஎஃப்ஏ கோப்பையையும், 3 முறை யு.இ.எப்.எ சூப்பர் கிண்ணத்தையும், 9 முறை கூட்டிணைவு கோப்பையையும் வென்றிருக்கிறது.
![]() | ||||
முழுப்பெயர் | லிவர்பூல் கால்பந்து கழகம் | |||
---|---|---|---|---|
அடைபெயர்(கள்) | தி ரெட்ஸ் | |||
தோற்றம் | 3 சூன் 1892; 132 ஆண்டுகள் முன்னர் (1892-06-03)[1] | |||
ஆட்டக்களம் | அன்ஃபீல்ட் | |||
ஆட்டக்கள கொள்ளளவு | 54,074[2] | |||
உரிமையாளர் | பென்வே ஸ்பாட் குழு | |||
அவைத்தலைவர் | டாம் வெர்னர் | |||
மேலாளர் | யொர்கன் க்ளாப் | |||
கூட்டமைப்பு | பிரீமியர் லீக் | |||
2022-23 | பிரீமியர் லீக், 5 ஆவது | |||
இணையதளம் | கழக முகப்புப் பக்கம் | |||
| ||||
![]() |
இந்த அணி 1892 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1893-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து லீக் காற்பந்து போட்டியில் பங்கேற்று வருகிறது. 1964 ஆம் ஆண்டு முதல் தாயக மைதானத்தில் சிகப்பு நிற உடை அணிந்து விளையாடி வருகிறார்கள்.1970 மற்றும் 80-களில், உள்நாட்டில் மற்றும் ஐரோப்பாவில் பல விருதுகளை வென்று ஜாம்பவானாக இருந்தது.
அணியின் ஆதரவாளர்கள் இரண்டு முறை மிகபெரிய துன்பமான சம்பவங்களை சந்தித்துள்ளார்கள். 1985 ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் ஹெய்செல் மைதானத்தில் நடந்த ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியின் போது அரங்கின் மேல்தளங்களில் நடந்த கலவரத்தால் 39 பார்வையாளர்கள் மரணமடைந்தனர். நான்கு ஆண்டுகள் கழித்து, 96 லிவர்பூல் ரசிகர்கள் ஷெஃபீல்டில் ஹில்ஸ்பரோ மைதானத்தில் நடந்த எஃப்.ஏ கோப்பை அரையிறுதிப் போட்டியில் நெரிசலில் நசுங்கி இறந்தனர்.
எவர்ட்டன் மற்றும் மன்செஸ்டர் யுனைட்டேட் அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டம் பரம எதிரிகளுக்கு இடையில் நடக்கும் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் கீதம் "யூ வில் நெவர் வாக் அலோன்" ஆகும். , அன்பீல்டு மைதானத்தில் தவறாமல் ஒவ்வொரு விளையாட்டு தொடங்குவதற்கு முன் ஒலிக்கப்படும். இந்த வார்த்தைகள், ஆன்ஃபீல்டு கிளப்பின் முகடு மற்றும் பில் ஷேங்க்லி கேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது..