லியாங் குவாங்லி
From Wikipedia, the free encyclopedia
லியாங் குவாங்லி (சீனம்: 梁光烈; பின்யின்: Liáng Guāngliè பிறப்பு: திசம்பர் 1940, சன்தாய், மியன்யாங், சிச்சுவான்) சீனாவின் ஒரு ஓய்வுபெற்ற படைத்தளபதியும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஆவார். 1958 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த குவாங்லி அதன் பின் பல பதவிகள் வகித்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை ராணுவத் தளபதியாக இருந்தார். இது தவிர குவாங்லி சீன அரசின் நடுவண் ராணுவக்குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். 2013 ஆம் ஆண்டு இவர் படைத்தளபதி பொறுப்பிலிருந்து ஒய்வுபெற்றார்.
விரைவான உண்மைகள் படைத்தளபதிலியாங் குவாங்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
படைத்தளபதி லியாங் குவாங்லி | |
---|---|
梁光烈 上将 | |
பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 17 மார்ச் 2008 – 16 மார்ச் 2013[1] | |
பிரதமர் | வென் ஜியாபாவோ |
முன்னையவர் | சாவ் காங்சுவன் |
பின்னவர் | சௌன் வான்சென் |
மக்கள் விடுதலை இராணுவப் பணியாளர் துறைத்தலைவர் | |
பதவியில் நவம்பர் 2002 – 2007 | |
முன்னையவர் | ஃபூ சுவென்யூ |
பின்னவர் | சென் பிங்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 திசம்பர் 1940 (1940-12-01) (அகவை 83) சன்தாய், சீனக்குடியரசு |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
முன்னாள் கல்லூரி | ஹுனான் பல்கலைக்கழகம் |
Military service | |
பற்றிணைப்பு | மக்கள் சீனக்குடியரசு |
கிளை/சேவை | மக்கள் விடுதலை இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1958–2013 |
தரம் | படைத்தளபதி |
மூடு