![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/Amy_Dumas_2017.jpg/640px-Amy_Dumas_2017.jpg&w=640&q=50)
லிதா
அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், விலங்கு நல ஆர்வலர், பாடகி / From Wikipedia, the free encyclopedia
ஆமி கிறிஸ்டின் டுமாஸ் (/dʊˈmɑː/; / பிறப்பு ஏப்ரல் 14, 1975), ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர், விலங்கு நல ஆர்வலர் மற்றும் பாடகி ஆவார். இவர் 2000 முதல் 2006 வரை உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கு மல்யுத்தப் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் நிறுவனத்துடன் பகுதிநேர தோற்றங்களை வெளிப்படுத்தினார். இவர் 2014 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . தனது மேடைப் பெயரான லிதா என்பதால் பரவலாக அறியப்படுகிரார்.
லிதா | |
---|---|
![]() 2017 மே இல் லிதா | |
இயற்பெயர் | எமி கிறிஸ்டைன் டுமாஸ் |
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை | |
மற்போர் பெயர் | லிதா |
Billed height | 5 அடி 5 அங்குலம் |
ஆரம்பத்தில் ஏஞ்சலிகா என்ற பெயரைப் பயன்படுத்தி, டுமாஸ் மெக்ஸிகோவில் தனது மல்யுத்த வாழ்க்கையை 1998 இல் கான்செஜோ முண்டியல் டி லுச்சா லிப்ரே (சி.எம்.எல்.எல்) உடன் தொடங்கினார், அதன்பிறகு 1999 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க சுயாதீன மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டார்.பின்னர் 6 மாதங்கள் எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் . டுமாஸ் நவம்பர் 1999 இல் உலக மல்யுத்த சம்மேளனத்துடன் (WWF, பின்னர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்) கையெழுத்திட்டார், பிப்ரவரி 2000 இல் லிதா எனும் மேடைப்பெயரில் அறிமுகமானார். முதலில், இவர் எஸ்ஸா ரியோஸுடன் இணைந்து விளையாடினார். ஆனால் இவர் மாட் மற்றும் ஜெஃப் ஹார்டியுடன் இணைந்து விளையாடியதன் மூலம் பரவலாக கவனம் பெறத் துவங்கினார். மேலும் 2005-2006 ஆம் ஆண்டில் முக்கியமான மல்யுத்த வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இந்தக் கால கட்டத்தில் தான் எட்ஜ் எனும் மற்போர் வீரருக்கு மேலாளராக இருந்தார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக நான்கு முறை உலக பெண்கள் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.
2006 இல் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர்தி லுகாகோர்ஸ் என்ற பங்க் ராக் இசைக்குழுவை உருவாக்கினார். இசைக்குழு செப்டம்பர் 11, 2007 அன்று அவர்களின் அறிமுகப் பாடலை வெளியிட்டது.