From Wikipedia, the free encyclopedia
லிக்கிர் (Likir), இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் அமைந்த லிக்கிர் வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2][3] இது லே நகரத்திலிருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமம் லடாக் மலைத்தொடரில் 3651 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பழமையான பௌத்த மடாலயம் உள்ளது. இங்குள்ள திபெத்திய பௌத்த மக்கள் லடாக்கி மொழி பேசுகின்றனர்.
லிக்கிர் | |
---|---|
ஆள்கூறுகள்: 34.2903203°N 77.2132106°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | லிக்கிர்[1] |
ஏற்றம் | 3,651 m (11,978 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,058 |
மொழிகள் | |
• அலுவல் | லடாக்கி, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
2011ஆம் கணக்கெடுப்பின்படி, 218 வீடுகள் கொண்ட லிக்கிர் கிராமத்தின் மக்கள் தொகை 1058 ஆகும். திபெத்திய பௌத்தம் பின்பற்றும் இக்கிராம மக்களில் 1056 பேர் மலைவாழ் பழங்குடிகள் ஆவார். இதன் சராசரி எழுத்தறிவு 72.93% ஆகும்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.