லனாவோ டெல் நோர்டே
பிலிப்பீன்சின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
லனாவோ டெல்நோ ர்டே (Lanao del Norte) என்பது பிலிப்பீன்சின் மின்டனவின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இது 1959 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இதன்த லைநகரம் துபொத் ஆகும். இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இமெல்டாபங்ங்கிங் சியூ. டிமபொரோ (Imelda "Angging" Q. Dimaporo) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,346.57 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக லனாவோ டெல்நோ ர்டே மாகாணத்தின் சனத்தொகை 676,395 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 40ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 43ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 200 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 46ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 462 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன.
லனாவோ டெல்நோ ர்டே | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | வடக்கு மின்டனவு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |