ரோட்ஸ்
ஏஜியன் கடலில் உள்ள கிரேக்கத் தீவு / From Wikipedia, the free encyclopedia
ரோட்ஸ் (Rhodes, கிரேக்கம்: Ρόδος) என்பது கிரேக்கத்தின் டோடெகனீஸ் தீவுகளில் மிகப்பெரியது மற்றும் தீவுக் குழுவின் வரலாற்று தலைநகராகவும் இருந்தது ஆகும். நிர்வாக ரீதியாக இந்தத் தீவு ரோட்ஸ் பிராந்திய அலகுக்குள் ஒரு தனி நகராட்சியைக் கொண்டுள்ளது. இது தெற்கு ஏஜியன் நிர்வாக பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். தீவின் முக்கிய நகரம் மற்றும் நகராட்சியாக தீவின் பெயராலேயே அமைந்த ரோட்ஸ் நகரம் உள்ளது.[2] ரோட்ஸ் நகரில் 2011 இல் 50,636 மக்கள் இருந்தனர். இது ஏதென்சின் தென்கிழக்கே கிரீட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 1310 முதல் 1522 வரை தீவை ஆண்ட ஜெருசலேமின் செயிண்ட் ஜானின் மாவீரர்களின் பெயரால் [3] மாவீரர் தீவு மற்றும் முத்துத் தீவு என்றும் ரோட்ஸ் தீவின் காவல் தெய்வமான சூரியக் கடவுள் ஹீலியோசின் காரணமாக சூரியனின் தீவு போன்ற பல புனைப்பெயர்கள் இத்தீவுக்கு உள்ளன.[3]
ரோட்ஸ்
Ρόδος | |
---|---|
தீவு மற்றும் நகராட்சி | |
ஆள்கூறுகள்: 36°10′N 27°56′E | |
நாடு | கிரேக்கம் |
நிர்வாகப் பிராந்தியம் | தெற்கு ஏஜியன் |
Prefecture | Dodecanese |
பிராந்திய அலகு | ரோட்ஸ் |
தொகுதி | ரோட்ஸ் |
அரசு | |
• மேயர் | அன்டோனியோஸ் கம்பூராகிஸ் [1] (New Democracy) |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,400.68 km2 (540.81 sq mi) |
உயர் புள்ளி (Attavyros) | 1,216 m (3,990 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,15,490 |
• அடர்த்தி | 82/km2 (210/sq mi) |
இனங்கள் | Rhodian, Rhodiot or Rhodiote (rare) |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 851 00, 851 31, 851 32, 851 33 (ரோட்ஸ் நகருக்கு) |
தொலைபேசிக் குறியீடு | 2241, 2244, 2246 |
இணையதளம் | www |
வரலாற்று ரீதியாக, ரோட்ஸ் தீவு பண்டைய உலக ஏழு அதிசயங்களில் ஒன்றான ரோடோசின் கோலோசுக்கு உலகளவில் மிகவும் பிரபலமானது. ரோட்ஸ் நகரின் இடைக்கால பழைய நகரம் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, இது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.[4][5][6][7]