From Wikipedia, the free encyclopedia
சர் ரோஜர் மூர் (Sir Roger Moore, 14 அக்டோபர் 1927 – 23 மே 2017) ஆங்கிலேய நடிகர் ஆவார். இவர் பிரித்தானிய இரகசிய முகவர் யேம்சு பாண்ட் பற்றிய திரைப்படங்களில் யேம்சு பாண்டாக 1973 முதல் 1985 வரை ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2][3] 1991 இல் இவர் யுனிசெப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். 2003 இல் இவருக்கு எலபெத் மகாராணி சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.
சர் ரோஜர் மூர் Sir Roger Moore | |
---|---|
1973 இல் மூர் | |
பிறப்பு | ரோஜர் ஜார்ஜ் மூர் 14 அக்டோபர் 1927 இசுடொக்வெல், இலண்டன் |
இறப்பு | 23 மே 2017 89) கிரான்சு-மொன்டானா, சுவிட்சர்லாந்து[1] | (அகவை
இறப்பிற்கான காரணம் | புற்று நோய் |
கல்லறை | மொனாக்கோவில் அஸ்தி கரைக்கப்பட்டது |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1945–2017 |
வாழ்க்கைத் துணை | டூர்ன் வான் இசுடெயின் (தி. 1946; ம.மு. 1953) டொரத்தி (தி. 1953; முறிவு 1968) லூயிசா மத்தியோலி (தி. 1969; முறிவு 1996) கிறித்தீனா தோல்சுட்ரப் (தி. 2002–2017) |
பிள்ளைகள் | 3 |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
roger-moore |
ரோஜர் மூர் 1927 அக்டோபர் 14 ம் தேதி லண்டனில் உள்ள லம்பேத்தின் லண்டன் பெருநகரத்தின் ஒரு பகுதியான ஸ்டாக்வெல்லில் பிறந்தார்.[4] இவரது தாயார் கொல்கத்தாவில் ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தவர்.[5] தந்தை ஜார்ஜ் ஆல்பிரட் மூர், ஒரு காவல்துறை அதிகாரி. பாட்டர்சீ இலக்கணப் பள்ளியிலும், கோர்ன்வால் லான்செசுடன் கல்லூரியிலும், பின்னர் அமெர்சாம் சாலமோர் இலக்கணப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[6] பின்னர் அவர் துர்ஹாம் பல்கலைக் கழகத்தின் வெனரபிள் பெடீ கல்லூரிக்குச் சென்றார், ஆனால் பட்டம் பெறவில்லை .
ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் இரண்டு கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தார், இதற்கு உதவியவர் இயக்குனர் பிரையன் டெஸ்மோண்ட் ஹர்ஸ்ட் . அத்துடன் சிறுசிறு பாத்திரங்களிலும் தோன்றினார் .அப்போது ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மனிபென்னி யாக வரும் லோயிஸ் மாஸ்வ்ல் இவருடன் படித்தார்
18 வயதில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தவுடன், மூர் தேசிய சேவையில் சேர்ந்தார். 21 செப்டம்பர் 1946 அன்று, ராயல் ராணுவ சேவை கார்ப்ஸில் இரண்டாம் லெப்டினண்ட் ஆக நியமிக்கப்பட்டார். அவருக்கு சேவை எண் 372394 வழங்கப்பட்டது. [4] இறுதியில் அவர் ஒரு கேப்டனாக ஆனார். மூர் மேற்கு ஜெர்மனியில் ஒரு சிறு துறையை நிர்வகித்து வந்தார் .
அப்பா போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே அவரின் லட்சியம். ஆனால் கடைசியில் ஓவியராகி பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார் ரோஜர் மூர். அதுவும் சிறிது காலமே நிலைத்தது. பின்னர் புகைப்படக் கலைஞரான தனது நண்பரின் உதவியால் வடிவழகு செய்தார். ஆனால் அதிலும் பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். வடிவழகு செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை வந்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார் ரோஜர். முதலில் வீதி நாடகங்கள், டிவி தொடர்களில் மட்டுமே வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். 'டிராயிங் ரூம் டிடெக்டிவ்', 'தி செயின்ட்' ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின டிவி சீரியல்கள். ஒருவழியாக 46 வயதில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்து.
1973-ல் வெளிவந்த 'லிவ் அண்ட் லெட் டை' திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட்டாக அவதரித்தார் ரோஜர் மூர்.1985 வரை 'ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி', 'ஏ வியூ டு எ கில்' உட்பட ஏழு படங்களில் 12 ஆண்டுகள் ஜேம்ஸ்பாண்ட் எடுத்த ஆக்ஷன் அவதாரங்கள் உலகை திரும்பிப் பார்க்கச் செய்தன. அதிக ஆண்டு காலம் 007 ஆக கோலோச்சிய ஒரே சாம்பவான் என்ற பெயர் எடுத்தார் ரோஜர்.
1946 ஆம் ஆண்டில், 18 வயதான மூர் ஒரு ராடா மாணவரை மணந்தார்; நடிகை மற்றும் ஐஸ் ஸ்கேட்டர் டோர்ன் வான் ஸ்டெயின் ,அவர் மூரை விட ஆறு வயது மூத்தவர் . [21] மூர் மற்றும் வான் ஸ்டெயன் ஸ்ட்ராத்தாமில் அவருடைய குடும்பத்தாருடன் வசித்தனர், ஆனால் பணத்திற்கான பதட்டங்கள், அவரது நடிப்புத் திறனில் நம்பிக்கை இல்லாததால் அவர்களது உறவை பாதித்தது. [22] ஒரு சந்தர்ப்பத்தில் அவர் மேல் தேநீர் கோப்பையை தூக்கி எறிந்தார் . அதன் பிறகே ராணுவ சேவைக்கு சென்றார் .
மூர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டார், அவற்றில் வெல்ஷ் பாடகர் டோரதி ஸ்கைர்ஸ் ,மற்றும் இத்தாலிய நடிகை லுயிசா மாட்டோலி, முக்கியமானவர்கள் .நடிகை லுயிசா மாட்டோலி ,அவருடன் மூன்று குழந்தைகள் பிறந்தனர் . டெபோரா மூர் மற்றும் ஜெஃப்ரி மூர் . மூர் 2008 இல் " மை வேர்ட் இஸ் மை பாண்ட் "என்ற சுயசரிதையை வெளியிட்டார்; அவர் தன்னுடைய வாழ்க்கையின் சினிமா பற்றி பிற புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். எல்லாவற்றையும்விட இந்த பணியே மிகுந்த மனநிறைவு அளிப்பதாக கூறுகிறார். யூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார்.
புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ரோஜர் மூர் அவரது 89 வது வயதில் ஸ்விட்சர்லாந்தில் 2017 மே 23 இல் காலமானார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.