அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
ரேவாரி மாவட்டம் (Rewari district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரேவார் நகரம் ஆகும்.
ரேவாரிமாவட்டத்தின் இடஅமைவு அரியானா | |
27.95°N 76.28°E - 28.47°N 76.85°E | |
---|---|
மாநிலம் | அரியானா, இந்தியா |
தலைமையகம் | ரேவாரி |
பரப்பு | 1,594 km2 (615 sq mi) |
மக்கட்தொகை | 900,332 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 565/km2 (1,460/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 25.93% |
படிப்பறிவு | 80.99% |
பாலின விகிதம் | 898 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 1. |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 553 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ரேவாரி மாவட்டத்தின் வடக்கில் சஜ்ஜர் மாவட்டம், வடகிழக்கில் குர்கான் மாவட்டம், கிழக்கில் மேவாத் மாவட்டம், தெற்கில் அல்வார் மாவட்டம், மேற்கில் மகேந்திரகர் மாவட்டம், வடமேற்கில் பிவானி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
ரேவாரி மாவட்டம் ரேவாரி, பாவல், கோஸ்லி மூன்று வருவாய் வட்டங்களும், தருகேரா, தஹினா, மனேதி மற்றும் நாகர் என நான்கு துணை வட்டங்களும் கொண்டது.
ரேவாரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரம் வேளாண்மையே. ஆண்டு சராசரி மழை பொழிவு 569.6 மில்லி மீட்டராகும். முக்கிய விளைபயிர்கள் கோதுமை, அரிசி, கரும்பு, பார்லி, சோளம், ஆமணக்கு வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகும். கால்நடை வளர்ப்பில் எருமை மற்றும் ஆடு முக்கிய இடம் பெறுகிறது.
பித்தளை உலோகப் பாத்திர உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 900,332 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.07% மக்களும்; நகரப்புறங்களில் 25.93% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 474,335 ஆண்களும் மற்றும் 425,997 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 898 பெண்கள் வீதம் உள்ளனர். 1,594 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 565 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 80.99% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.44% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 113,893 ஆக உள்ளது. [1]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 889,133 (98.76%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,804 (0.20 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,713 (0.63%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 701 (0.08 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,525 (0.1%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 202 (0.02%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 12 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,242 (0.14%) ஆகவும் உள்ளது.
அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழியான அரியான்வியும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.