ரிட்ஜ் சாலை (The Ridge) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய வெளிப்புற இடமாகும். சிம்லாவின் அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளிலும் ரிட்ஜ் மையமாக உள்ளது. இது சிம்லாவின் புகழ்பெற்ற வணிக மையம் ஒன்று சாலை வழியாக அமைந்துள்ளது. சிம்லாவின் முக்கிய இடங்களான ஸ்நோடன், மால், ஜாகு மலை போன்றவை ரிட்ஜ் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் ரிட்ஜ், சிம்லா, ஏற்றம் ...
ரிட்ஜ், சிம்லா
Thumb
ரிட்ஜ், சிம்லா ஸ்கேண்டல் முனையிலிருந்து பார்க்கையில் பனிப்பகுதியில் மூடப்பட்டிருக்கும் பகுதி
ஏற்றம்
2,205 m (7,234 ft)
மூடு
Thumb
ரிட்ஜ், சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா

இது மால் சாலையுடன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கிறது, மற்றும் மேற்கு பக்கத்தில் ஸ்கேண்டல் பாயிண்ட் அதை இணைக்கிறது. கிழக்கு பக்கத்தில், ரிட்ஜ் சாலை லக்கர் பஜார், ஒரு மர கைவினை சந்தைக்கு வழிவகுக்கிறது. இது பெரிய மைல்கல் மற்றும் மலை வாசஸ்தலத்தின் மிகவும் எளிமையான அடையாளம் ஆகும். குளிர்காலம் துவங்கும் போது, நாட்டில் பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டால், பெரும்பாலான பத்திரிகைகளில் பனிப்பொழிவுகளுடன் கூடிய காடுகளின் புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன.

ரிட்ஜ் பகுதி தேவாலயத்தின் நவ-கோதிக் கட்டமைப்பில் 1844 ஆம் ஆண்டு முதன் முதலாக கட்டப்பட்டது,மேலும் 1910 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு டுடோர்பேதன் போன்ற நூலகம் கட்டப்பட்டது. ரிட்ஜ் மீது இமாச்சலப் பிரதேச முதல் முதல் மந்திரியாக திகழ்ந்த டாக்டர் ஒ.எஸ் பார்மர், மகாத்மா காந்தி மற்றும் இந்திரா காந்தி ஆகியோரது சிலைகள் அமைந்துள்ளன.

இது உலகின் மிகப் பெரிய மலைப் பகுதியாகும், ஒரு காலத்தில் சிம்லாவின் அடிவாரத்தில், மிகப்பெரிய வனப்பகுதி இருந்தது, இப்போது பசுமையான சரிவுகளான ஃபிர்ஸ், பைன், இமாலயன் ஓக் மற்றும் கார்மின் ரோதோடென்ட்ரான் மரங்கள் ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளது, இதில் சிவப்பு-கூரைத் தட்டுகள், பகுதி மூடப்பட்ட வீடுகள் மற்றும் கோதிக் அரசு கட்டிடங்கள் ரிட்ஜில் காணப்படுகின்றன.

முக்கியத்துவம்

ரிட்ஜ்ஜின் அடியில், பிரித்தானிய சுற்றுலா நகரத்திற்கு நீர் வழங்கப்படும் பெரிய குளங்கள் உள்ளன. ரிட்ஜ் நகரின் உயிர் நீர்த்தேவை போக்கும் நீர்த்தேக்கத்தைக் கொண்டிருக்கிறது, இது 1000000 கேலன் நீர் திறனைக் கொண்டுள்ளது. இந்த குளங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரிய அளவில் இருப்பதால், அவை சிம்லாவுக்கு முக்கிய நீர் விநியோகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நீர்த்தேக்கம் 1880 களில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது, எந்த சிமெண்ட்டையும் பயன்படுத்தமல் சுண்ணாம்பு கலவைகளைக் கொண்டு கட்டப்பட்டது.

ரிட்ஜ் பல அரசு விழாக்கள் ,செயல்பாடுகள் மற்றும் கண்காட்சிக்கு புகழ் பெற்றது. பொதுவாக இது போன்ற கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான இடமாக விளங்குகிறது. ரிட்ஜில் நடைபெறும் மிக பிரபலமான திருவிழா கோடை விழாவாகும். இந்த புகழ்பெற்ற திருவிழா ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த காலங்களில் சிம்லா முழுவதுமே வண்ணமயமாகவும் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளின் கலவையாகவும் திகழும். ரிட்ஜ் ஜ்ஜின் முக்கிய அடையாளங்களான கிருத்து தேவாலயம், ஒரு நவ-கோதிக் மாதியில் 1850 களில் கட்டப்பட்ட அமைப்பு, மற்றும் ஒரு டியுடெர்பெத்தியக் நூலக கட்டடமும் ஆகும்.[1]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.